முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
11. திருவெங்கையுலா
180   படிவ நனிநன்கு பார்த்தா டவழும்
     முடியி லிளம்பிறையு முன்னாள் - வடிவழகன்
     கையி லளமானுங் காதலியா ளெம்பெருமான்
     மொய்யகலம் வேய்ந்து முருகுயிர்க்குஞ் - செய்ய
     கடுக்கையினப் போதே கருத்தூழ் நடாத்த
     மடக்கொடியிவ் வீசர்தோண் மாலை - அடுத்தெனக்கு
     வாங்கி யுதவுமென மைக்கண் கலுழ்ந்துருகத்
     தீங்கிலுமை பங்கன் றிருவிழவுள் - யாங்களிளம்
     பேதையென வைப்பப் பெதும்பைச் செயலுமலால்
     மாதிவளோர் மங்கைசெயன் மன்னினாள் - யாதினியாஞ்
(181)
185   செய்யுஞ் செயலென்று சிந்தித் துளங்கலங்கிப்
     பெய்யுஞ் சிறுவளைக்கைப் பெண்ணமுதே - ஐயன்
     திருத்தார் நினைக்கிரத்தல் செய்தும் புனைதற்
     குரித்தா மூலைவந் துரத்திற் - பருத்தாலென்
     றோதிக் கலுழ்கை யொழித்தா ரிவளன்று
     பேதைப் பருவம் பெறுகையால் - ஆதிப்
     பெருமான் விடுத்தகன்றான் பேரருளால் பாகத்
     தொருமா னிவட்பார்த் துவந்தாள் - பொருமாரன்
     நூறடுத்த கோடி நுனைப்பகழி கொண்டாலும்
     மாறிவட்கென் செய்வான் வறிதகன்றான் - வேறொருத்தி
     
     பெதும்பை
     
(186)
190   சீர்க்கு மிறைஞராந் தேன்முரலும் போதாகப்
      பார்க்கும் பெதும்பைப் பருவத்தாள் - யார்க்குந்
     தனைக்காணில் வாய்நீர் தரும்புளியி னுண்மால்
     தனைக்காணி னல்குமொரு தையல் - நனைக்காமம்
     உள்ள மரும்ப வுணர்வுடைய யோகிகட்குங்
     கள்ள மரும்புகயற் கண்ணினாள் - கொள்ளுந்
     தகவையிரு பங்காக்கித் தாமிருப்பக் கண்கள்
     முகவினடு விட்டசுவர் மூக்காள் - மிகவும்
     புரிந்தநெடுங் கூந்தற் பொறைவருமுன் னாணால்
     வருந்துநறுஞ் சந்த வளையாள் - திருந்த
(191)

181.180-185. மொய் அகலம்-வலிய மார்பு. வேய்ந்து-அணிந்து. முருகுயிர்க்கும்-மணத்தை வெள்ப்படுத்தும். கடுக்கையில்-கொன்றை மாலையில். கருத்து-கருத்தை. ஊழ்-ஊழ்வலி. மடக்கொடி-பேதை. கலுழ்ந்து-அழுது. மன்னினாள்-பொருத்தினாள். 186.185-190. செய்தும்-செய்கிறோம். உரத்தில்-மார்பில். கலுழ்கை-அழுகை. ஒருமான்-மானைப்போன்ற பெரிய நாயகி. நுனைப்பகழி-கூரையுடைய கணை. மாறு-மாறுபாடு. வறிது-வீண். 191.190-195. முரலும்-ஒலிக்கும். கொள்ளுந்தகவை-எல்லோரையும் வருத்துதல் முதலிய பெருமையை. வளையாள்-கழுத்துடையவள்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்