முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
11. திருவெங்கையுலா
195   மனங்குழைக்கும் பெண்வளர்த்தான் மானக் குதம்பை
     கனங்குழைக்கு நல்கும்வார் காதாள் - முனங்குழைக்கும்
     மண்விடுத்துப் பூசு மணங்குழைப்பாண் முன்பிறழ்ந்த
     எண்விடுத்துச் செவ்வ னியம்புவாள் - பெண்விடுத்துப்
     பூமங்கை யாணவாம் பொற்பினாள் கல்விகொடு
     பாமங்கை தாளிற் பணிகுவாள் - காமன்றன்
     வல்லியிவள் போலுமவள் வாட்போலுங் கண்ணினள
     வில்லைபுகுந் தாயி னெனப்படுவாள் - மெல்ல
     இடையயிரா தாழி யெழுங்கதிர்முன் றோன்றும்
     முடி நுனிபோற் றோன்று முலையாள் - அடியழகு
(196)
200   பூழி யழிப்பப் புறந்திரியா டற்போற்றுந்
     தோழியர்நூ றாயிரவர் சூழ்ந்துவரக் - கேழின்
     நிலைய வுறுப்பு நிகரா தவற்றின்
     வலைய மலைப்ப மனங்கொண் - டிலகிலஞ்சி
     சென்று புகுந்துவளர் சில்லோதி தன்பகையாம்
     என்றுநெடும் பாசி யிடையொதுங்க - மன்றனறுங்
     காவிவிழி கண்டுகுப்பக் கண்ணீர் குழைபகைத்த
     ஆவிபடர் வள்ளை யடிதுடக்கத் - தூவிதழ
     ஆம்பன் மலர்வா யதுகண்டு வாய்திறப்ப
     மேம்பல் வளைகழுத்தால் வீழ்ந்தொளிப்பக் - கூம்பல்
(201)
205   முகைகண்டு தாழ முலையை முழந்தாட்
     பகைகண்டு ஞெண்டளைகள் பார்ப்பத் - தகைகொண்டு
     வாய்ந்தகணைக் காற்கு வராலிரியத் தாட்புறக்குப்
     போந்த கமடம் புறங்காட்டக் - காந்தளுடை
     தன்னெதிர்கஞ் சஞ்சிவந்து சாயாது நிற்பக்கை
     அந்நிலையிற் கொய்தாங் கதுபற்ற - மின்னனையாள்
     ஆடவரோ டாடினா ளாகப் புனலாடி
     மாட மணிமறுகில் வந்துறலும் - நீடு
     கரும்பு மலருங் கலந்துவிழை வாக்க
     விரும்புமதன் போன்மூலை வீதி - திரும்பிப்
(206)

196.195-200. முனம்-பேதைப் பருவத்தில். பூமங்கை-திருமகள். ஆணவாம்-ஆண் தன்மையை விரும்பும். பாமங்கை-கலைமகள். அயிராது-ஐயப்படாமல். 201.200-205. கேழில்-உவமையில்லாத. இலஞ்சி-தடாகம். சில்லோதி-சிலவாகிய கூந்தல். காவி-கருங்குவளை. உகுப்ப-சிந்த. வள்ளை-வள்ளைக்கொடி. ஆம்பல்-செவ்வல்லி. 206.205-210. ஞெண்டு-நண்டுகள். அளைகள்-வளைகள். வராலிரிய-வரால் மீன்கள் அஞ்சியோட. தாட்புறக்கு-புறவடிக்கு. கமடம்-ஆமை. புறங்காட்ட-தோற்றோட. காந்தள்-காந்தள் மலரும். உடை-தோல்வியடைய. கஞ்சம்-தாமரை. சாயாது-தோல்வியடையாமல். ஆடினாளாக-கலந்தவளைப்போல. மணிமறுகு-அழகிய தெரு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்