| 11. திருவெங்கையுலா |
|
| |
210 பரிதிநெடுந் தேர்வருதல் பார்த்தவக லல்குல் இரதியெனத் தானுமெதி ரேற்றாள் - கருதின் அரிய நுதற்க ணரசையருள் காட்டுங் கரிய மிடற்றமுதைக் கண்டாள் - உரிய இறைவற்குத் தக்காங் கிறைஞ்சினா ணூலின் முறைமுற் றிரத முதல - குறைவற்ற மல்கு விழிவார வாரத் தகப்படா தொல்கு மருங்கி லுமைமங்கை புல்குந் திருத்தோளிற் கண்வழிதன் சிந்தைபோய்க் காம எரித்தோற்ற மெய்துறுமவ் வெல்லை - உருத்தோர்
|
(211) |
| |
| |
215 பெருநாண் டடுத்துப் பிணைவிழியு ணீருங் குருநாண் மலர்க்கைக் குருகும் - அரநாண் அகல்கின்ற வல்குலிற்பட் டாடையுநிற் பிக்கப் புகல்கின்றா ளிம்முளரிப் பூவைப் - பகல்குன்றச் சோதி தருமிவற்குச் சூட்டியக்கான் மற்றிவன்றான் ஏதுதரு நல்கு மெனக்கென்ன - ஓதி பெருகொருத்தி சென்றருகு பெண்ணணங்கே யின்பம் பருகற் கிரண்டாம் பதமாம் - அருகிருத்தல் ஈந்தருளு மென்ன விறைவி யருகிருப்பு வாய்ந்த முதற்பதமா வைத்தெண்ணிப் - போந்த
|
(216) |
| |
| |
220 மனக்களிப்பு மல்கிமலை மாதையஞ்சி யீசன் தனக்களிப்ப வெண்ணுமலர் தன்னை - நினக்களிப்பன் என்ன வவடா னிவண்மனம்பே தித்ததெனாக் கன்ன லனையமொழிக் காரிகையே - பொன்னிரதம் மங்கை முலைகளோ வள்ளறடந் தோள்களோ இங்கிவையி னல்ல வியம்பென்ன - அங்கவளுங் கூறாது தன்கடைக்கண் கோமான் புயத்துறுப்ப வேறான துள்ளமெனன் மெய்யென்று - தேறாக் கொலைமாலை வேற்கணாட் கொண்டுமட மாதர் தலைமாட வீதியய னீங்கச் - சிலைமாரன்
|
(221) |
| |
|
| |
211.10-215. எதிரேற்றாள்-எதிரே சென்றாள். விழவு-திருவிழாவின். ஆரவாரத்து-ஆரவாரத்தில். ஒல்கும்-அசையும். புல்கும்-தழுவும். காமஎரி-காமத்தீ. உருத்து-சினந்து. 216.15-220. குரு-செந்நிறமமைந்த. குருகு-வளையல். அர-பாம்பும். நாண்-நாணுகின்ற. முளரிப்பூவை-தாமரை மலரை. ஓதி-அறிவு. 221.20-225. மல்கி-மிகுந்து. பேதித்தது-மாறுபாட்டையடைந்தது. கன்னல்-கரும்பு. உறுப்ப-தாக்க. கொலைமாலை வேற்கணாள்-கொலை செய்யுந் தன்மையையுடைய மாலையணிந்த வேற்படை போலுங் கண்ணையுடையவள். எய்ய-கணை செலுத்த.
|
|
|
|