முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
11. திருவெங்கையுலா
225   கிட்டிக்கொண் டெந்தைமுன்செல் கின்ற விநாயகற்குக்
     குட்டிக்கொண் டெய்யநாட் கொண்டகன்றான் - சுட்டிக்கொண்
     டொப்பாக வோதற் கொருபொருளு மில்லான்றேர்
     அப்பான் மறுகி னடைந்ததால் - இப்பால்
     
     மங்கை
     
     இலர்போ லவாவி யிசையளிக ளுண்ணாண்
     மலர்போன் மலர்செவ்வி மங்கை - அலர்போ
     தலைமங்கை செய்யா ளறவுங் கரியாள்
     மலைமங்கை சாலவுமென் மங்கை - கலைமங்கை
     வெள்ளை யவட்கருத வேண்டா வெனுமங்கை
     கள்ளை விடுத்துமதங் காண்மங்கை - கிள்ளைமொழிச்
(226)
230   செந்திருமென் கொங்கை திருமா றிளைக்குங்கால்
     புந்திதனிற் கொள்ளும் பொலிவினாள் - இந்திரன்றன்
     ஆக்கத் தினைவிழையா வாற்று மருந்தவங்கள்
     நீக்கித் தனைநினையு நீர்மையாள் - சீர்க்கமல
     ஆதியயன் மீக்கூ ரரம்பையரை யாக்குங்கால்
     மாதிரிகை யாகவுனும் வாய்ப்பினாள் - சோதிமணி
     அன்று சுடரொன் றமைந்த மனைபுகினுங்
     கன்று தளிர்மெய்க் கவினுடையாள் - இன்று
     திருத்தேர் விழாவென்று சேடியர்க ளீண்டி
     மருத்தே ரளிசூழ் மலருந் - திருத்தேர்
(231)
235   இழையுந் துகிலு மெனைத்துங் கொணர்ந்து
     விழையும் படியணிய வேண்டக் - குழையும்
     மனத்தொடுமென் றூசு மணிமே கலையாம்
     இனத்தொடு சேரவுடுத் திட்டுச் - சனித்தவிடம்
     முற்றுங் கவரா முகிண்முலைமுன் றானையால்
     முற்றுங் கருணைகொடு மூடினாள் - முற்றும்
     புருவவணி மாறாப் பொருவிழிக்கு மையிட்டு
     உருவ மதியை யுவந்து - மருவுமொரு
     பைத்த நெடியகரும் பாம்பென்னப் பின்னுபுமுன்
     வைத்த குழலின் மலர்புனைந்தாள் - மொய்த்தபுகழ்
(236)

226.25-230. இலர்-வறுமையுடையவர். நாள் மலர்-அன்றலர்ந்த மலர். அலைமங்கை-திருமகள். அறவுங்கரியாள்-மிகவுங் கருமையானவள். 231.230-235. ஆக்கம்-செல்வம் ஆற்றும்-செய்யும். நீர்மையாள்-தன்மையுடையவள். ஆதி-எண்ணிக்கையில் முதலாகிய. மீக்கூர்-தெய்வலோகத்துள்ள அழகுமிகுந்த. மாதிரிகை-மாதிரி. உனும்-எண்ணுகின்ற வாய்ப்பினாள்-மாட்சிமையுடையவள். கன்று-கைகின்ற மருத்தேர்-நறுமணத்தை ஆராய்கின்ற 236.235-240. இழை-அணிகலம். துகில்-ஆடை. விழையும்படி-விரும்புமாறு. குழையும் மனம்-கனிந்த உள்ளம். முகிள்-முகிழையொத்த. பொருவிழி-காதோடு போர் செய்கின்ற விழி. பைத்த-படத்தையுடைய.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்