முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
11. திருவெங்கையுலா
240   ஈசற்குத் திங்களொன்றே யென்றுகதி ரும்பிறையும்
     வாசக் குழன்முன் வகுத்தணிந்தாள் - நேசத்
     திலக மதிக்கிழிந்த சிற்றரவ மென்ன
     இலகமணிச் சுட்டிபுனைந் திட்டாள் - கலகமிடக்
     கண்ணிற்கு வேள்விடுத்த வோலையெனக் காதிற்கு
     வண்ணப்பொன் னோலை வதிவித்தாள் - நண்ணி
     முயங்கு முரோணி முழுமதியோ டென்ன
     வயங்குகொடி மூக்கார மாட்டி - உயங்கியயல்
     ஏனை மதிமாத ரெல்லா மிருப்பதென
     ஆனமணி மாலைகழுத் தார்வித்தாள் - மானவளை
(241)
245   காக்க மணிபொற் கடகங் கரஞ்செறித்துச்
     சேக்க வடியிற் சிலம்பணிந்தாள் - நோக்கமுதம்
     அன்னா ளொழிந்த வணிபலவுந் தாங்கினாள்
     பொன்னா லியன்றவுருப் போன்றமைந்தாள் - பின்னால்
     உருப்பசி யன்ன வொருத்தி யளிப்பக்
     கருப்புரமென் பாகு கவுட்கொண் - டிருப்பவொரு
     மாது குறுதி மயிலேபொற் றேரொடுநம்
     வீதிதனில் வந்தான் விமலனென யாதும்
     வருவதுண ராமன் மகிழ்ந்தெழுந்து நங்கை
     பொருவதரும் வீதி புறப்பட் - டுருவதிலி
(246)
250   உற்றபெருந் தானையென வுண்கண்ணு மொண்கவுளும்
     பற்றுபுகர் வாளும் பரிசையுமாம் - முற்றிழையார்
     எண்ணிலா ரீண்டி யிருமருங்கும் போற்றிவரத்
     தண்ணிலா வேணியரன் றன்னெதிர்போய் - அண்ணல்மேல்
     வண்டு மலரென்னும் வார்சிலையி னேர்தொடுத்துப்
     பண்டுமத னெய்த பரிசென்னக் - கொண்டு
     விலங்க விழிப்பகழி விற்புருவ மேற்றி
     இலங்க வருமிறைதோ ளெய்தாள் - கலங்கலரும்
      அண்ணறான் யோகநிலை யன்மையாற் றன்பரிதிக்
     கண்ணினா னோக்கவெரி காமத்தீ - ஒண்ணுதலாள்
(251)

241.240-245. கதிரும் பிறையும்-சூரியப் பிறையையும் சந்திரப் பிறையையும். வேள்-காமன். மூக்காரம்-மூக்குத் தளுக்க, மூக்குத்தியென்பர். ஆர்வித்தாள்-சேரச் செய்தாள். 246.245-250. சேக்க-சிவக்குமாறு. நோக்கமுதம்-பார்த்தற்குரிய அமுதம். அன்னாள்-ஒத்தவள். கருப்புரமென்பாகு-பச்சைக் கற்பூரங்கலந்த பாகடை. உருவதிவி-காமன். 251.250-255. உண்கண்-மையுண்டகண். ஒண்கவுளும்-ஒள்ளிய கன்னமும். முற்றிழையார்-வேலைப்பாடு முற்றிய அணிகலன்களை அணிந்தவர்கள். விழிப்பகழி-விழிக்கணை. விற்புருவம்-புருவமாகிய வில். பரிதிக்கண்-கதிரவனாகிய கண்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்