முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
11. திருவெங்கையுலா
255   ஆகநீ றாகா வளவுபோய்ப் பற்றுதலும்
     போகமார் மாலை பொடிந்தொழியப் - பாகவாஞ்
     சொல்லாள் பணியுட் டொலைந்தன வன்றியுள
     எல்லா முருகி யிலையாக - நல்லார்
     இதுவந்த தெம்மா லெனவுள்ள மாழ்கி
     மதுவந்த கொன்றையந்தார் வள்ளல் - எதிர்வந்து
     நின்று தொழுவா னினையிங் கியாங்கொணர
     என்று மறியா விடும்பையெலாம் - அன்றிவட்குத்
     தந்தா யுலகியல்பு தானுமலாற் புன்மாலை
     வந்தால் வருத்தும் வளர்பிறையை - அந்தோ
(256)
260   சுமந்துவந்திப் போதே சுடுவித்தா யீதுன்
     அமைந்த திருவருளுக் காமோ - சமைந்தவொரு
     கோதை யனையாள் குழலிசைய வண்டுறலால்
     மேதைதரு கல்யாணர் வேண்டுதலால் - போதுபல
     பூத்த வவயவமாம் பொற்பினா லூறினிமை
     வாய்த்தமையான் மாறா மணத்தினால் - சீர்த்திபுனை
     நின்றிருத்தோட் கேற்ற நிலையா ளணைந்தருளாய்
     என்றுரைத்து வேண்டுதலு மெம்பிரா - னன்றடுத்த
     பங்குமையை யஞ்சிப் படர்சடையில் வைத்தொளித்தாம்
     கங்கையினை யிவ்விருவர் காணாமல் - எங்கிவளை
(261)
265   நாமொளிப்ப மென்னா நடாத்தினான் பொற்றிருத்தேர்
     காம னடுத்துக் கணைமாரி - கோமளப்பொன்
     வஞ்சிமிசை தூர்த்து வருந்திக்கை விட்டகன்றான்
     அஞ்சனவேற் கண்ணா ளவட்கப்பால் - கஞ்சம்
     
     மடந்தை
     
     அடங்கு பொகுட்டி னமர்திருவிற் கோடி
     மடங்கு கவின்கூர் மடந்தை - நுடங்கு
     கொடிமின் னொழுக்காக் குளிர்புயன்மே னின்ற
     படிமன்னு கூந்தலுடைப் பாவை - தொடிமன்னு
     செங்கைக் குமாரவேள் செவ்வேலை யொப்பாக்கச்
     சங்கப் புலவர்க்குத் தானுரைப்ப - அங்கடுத்து
(266)

256.255-260. ஆகம்-உடல். பொடிந்தொழிய-தூளாக. பாகு அவாம்-இனிமை பொருந்திய பாகும் விரும்புகின்ற. இலையாக-இல்லையாக. மாழ்கி-வருந்தி. இடும்பை-துன்பம். புன்மாலை-இழிந்த மாலைக்காலம். 261.260-265. கோதை அனையாள்-மாலையைப் போன்றவள். மேதை தரு-மேன்மைபெற்ற. ஊறினிமை-பரிசவின்பம். 266.265-270. கோமளம்-இளமை. வஞ்சி-வஞ்சிக் கொடி. அஞ்சணம்-மை. பொகுட்டு-தாமரைக் கொட்டை. நுடங்கு-அசைகிற. தொடி-கடகம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்