முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
11. திருவெங்கையுலா
280   மாரவே ளம்பாக்கின் வார்புருவக் கென்சிலையும்
     நேருமே யென்னு நெடுங்கண்ணாள் - சீருலாங்
     காரளகம் வின்னுதல்வேற் கண்குமிழ்மூக் கூசல்கா
     தாரமெயி றாம்பலித ழாடிகவுள் - வேரறோள்
     காந்தளங்கை யோதிகொங்கை காயமிடை வாழைதொடை
     மாந்தளிர்செந் தாளென்று மாதரெனப் - போந்தவர்கள்
     எல்லார்க்கு மொப்ப விசைப்பவற்றை யொப்பாக்கல்
     பொல்லா தெனவுயர்ந்த புத்தமுதம் - நில்லாமல்
     மாதவர்கண் மால்கொள்ள மால்கொண்ட பெண்ணுருவும்
     யாதுமழ கில்லை யெனவந்தாள் - கோதில்
(271)
285   துறவறமொன் றுண்டென்று சொல்லுமுறை தற்கண்
     ணுறுமளவு மென்னு முருவாள் - பொறியரவும்
     மந்தர வெற்பு மறிகடலு மின்றமுதந்
     தந்தருளுஞ் செவ்வாய்த் தளிரியலாள் - செந்திருவோ
     டொத்தக லாத வுயிர்ப்பாங் கியைவிளித்து
     முத்த மணல்பரந்த முன்றில்வாய் - இத்தலையில்
     வென்றா ளுடைந்தாள் விரிபசும்பொற் பூண்கொள்க
     என்றாள் பொருந்தி யிளந்தளிர்க்கைக் - கன்றாடக்
     காமர் மணிமே கலைகலிப்பப் பூணொலிப்பச்
     சேமவிடை யின்றென்று தேராத - தாம
(276)
290   முலைமேற் றுகினுடங்க முண்டகச்செம் போதில்
     சிலைமேற் சிறுவியர்வு சேரத் - தலைமேல்
     சுரும்பரெழுந் தார்ப்பத் துகண்மாலை தூர்ப்பக்
     கருங்குவளைக் கண்பிறழ்வு காட்டப் - பெரும்புவியில்
     முந்தடித்துச் செல்வ முறையாற் றொடர்வதென
     அந்தரத்து மங்கை யடுத்தெழுவான் - பந்தடித்துப்
     பூவை விளையாடும் போதி லொருமூவர்
     பாவை விழையும் பழமலையான் - கோவை
     எழுதுந் திருக்கரத்தா னெய்யாமல் வேதம்
      முழுதும் புகழு முதல்வன் - தொழுதுந்
(281)

271.270-275. நேரும்-ஒப்பாகும் கார் அளகம்-கூந்தல் முகில். வில்நுதல்-நெற்றிவில். வேல் கண்-கண்வேல். ஓதி-மலை. காயம்-ஆகாயம். மால்கொண்ட-திருமால்கொண்ட. கோதில்-குற்றமற்ற. 276.275-280. இத்தலையில்-இவ்விடத்தில். உடைந்தாள்-தோற்றாள். கன்று-வளையல். கலிப்ப-ஒலிக்க.சேமம்-காவல். 281.280-285. முண்டகச் செம்போது-செந்தாமரை மலரைப்போன்ற முகம். சிலை-நெற்றி. தூர்ப்ப-சிந்த. பிறழ்வு-பிறழ்தல். முந்து-முன்னர். முறையால்-ஊழின் முறையால். பூவை-பெண். மூவர்பா-தேவாரம். கோவை-திருக்கோவையார்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்