| 11. திருவெங்கையுலா |
|
| |
285 துதித்து முழுநாட் டொலைப்போ ருளத்தான் விதித்து வருமோர் வினையுந் - திதிததொழிலும் கொள்ளுமவ ரோடுலகங் கோறற் றொழில்புரிந்துந் தெள்ளுமரு ளாண்மை சிதையா தான் - உள்ளுமறை கற்றும் பிறரைக் கடவுளென்பார்க் காண்கைமுதற் குற்றம் பொறுத்தெனையாட் கொள்ளுவான் - முற்றுந் தனக்கடிமை யென்னுமாற் றம்பிரான் பூட்கைச் சினக்கடிய வேழவுரிச் செல்வன் - மனக்கினிய துங்க மணிநெடுந்தேர் தோன்றுதலும் வல்விரைந்து நங்கைவரிப் பந்தொடும்போய் நண்ணினாள் - எங்கள்
|
(286) |
| |
| |
290 கருத்தனைமுன் கண்டாள் கருநெடுங்கண் ணீரோ பருத்த முலையின் பசப்போ - தெரித்தமலர்ப் பைந்தெரிய லின்புலர்வோ பல்வளைக டஞ்செலவோ வந்துவளர் நாற்குணத்தின் மாய்தலோ - முந்தியதிங் கேதோ வறியோ மிவையெலா மெய்தினாள் காதோ டமர்செய் கயற்கண்ணாள் - மாதோர் புறத்திருப்பக் கண்டுதான் புல்லியமேற் சேறல் மறுத்தடுத்தோர் சூழ்ச்சி மனத்துள் - குறித்து நினக்குவென்றி யாயி னினக்கே யிவர்தோள் எனக்குவென்றி யாயி னெனக்கே - இனக்கரியுங்
|
(291) |
| |
| |
295 கோடாத நின்பாற் கொழநனே யென்னொடுபந் தாடா யெனவுரைப்ப வப்பாங்கி - ஓடா அணங்கே யெனப்போ லவளைமதித் தாய்கொல் இணங்கே ருனக்கொவ்வா ளேனுங் - குணங்கூர் இறைவி யலளோ விதுதகுமோ வென்ன மறைவி யலனிவ் வழக்குப் - பெறவிவ் விருவர்க்கு மோது மியற்கைத்தன் றென்னா உருவக் கொடிநெடுந்தே ரூர்ந்து - விரைவில் திருத்து மிவள்பொற் றெருக்கடந்து சென்றான் வருத்துமத னாண்டொழிய மற்றும் - ஒருத்தி அரிவை
|
(296) |
| |
|
| |
286.285-290. முழுநாள் தொலைப்போர்-முழுநாளையும் போக்குபவர். திதித்தொழில்-காத்தற்றொழில். கோறல்-கொல்லுதல். தெள்ளும்-தெளிந்த. அருளாண்மை-திருவருளையாட்சி செய்யுந்தன்மை. வல்விரைந்து-மிகவிரைந்து. நங்கை-மடந்தை. 291.290-295. கருத்தன்-தலைவன். பசப்பு-பசலை. புலர்வு-வாடுதல். செலவோ-கழலுதலோ. வளைகள்-வளையல்கள். மாய்தலோ-அழிதலோ. இவையெலாம்-இச் செயலெலாம். அமர்-போர். புல்லிய-தழுவ. மறுத்து-நீக்கி. இனக்கரி-ஒத்தசாட்சி. 296.295-300. கோடாத-மாறுபடாத. அவளை-அவளையும். ஏர்-அழகு. மறவி-மறதி. இயற்கைத் தன்று-இயல்புடைய தன்று. மதன்-காமன். ஆண் டொழிய-அவ்விடமே நிற்க.
|
|
|
|