| 11. திருவெங்கையுலா |
|
| |
330 ஆனாய னார்த மரியவிசைக் கல்லாமல் காணார் மலர்க்குழலாள் காமமொடு - தானாளும் இன்னிசைகேட் டுள்ளுருகற் கிம்மலைதா னம்மலையோ என்னிசையச் சொல்கென் றெடுத்தியம்பிப் - பொன்னவிர்செம் பூண்டயங்கு மென்முலையா ரேனையர்பின் போயினார் காண்டகுநம் வெங்கைநகர்க் காவலான் - நீண்ட கருமா லுலகங் கடந்தான்றன் கண்கள் திருமா மலரென்ற றேற்றம் - வருமாறு தொள்ளா யிரத்துத்தொண் ணூற்றொன்ப தொண்மலரும் எள்ளா விழியொன்று மிட்டவடி - உள்ளான்
|
(331) |
| |
| |
335 மதனன் மலர்ப்பகழி மாறா மறுகில் புதுநன் மணித்தேரிற் போனான் - அதனில் தெரிவை இருந்த பதினா யிரவரம்பை மாருள் தெரிந்துமதன் வைத்த தெரிவை - திருந்த நடந்தா லரசவன்ன நச்சப் படாத தடந்தா மரைவென்ற தாட்கும் - அடைந்தார்க்கும் வண்டமை யாது வரியாழ் பயிலாது தண்டளிர் தோல்வி தருகைக்குங் - கொண்டமணிக் கண்ணின் றிருக்குங் கனக மலைவணங்க எண்ணின் றிருக்கு மிளமுலைக்கும் - புண்ணின்
|
(336) |
| |
| |
340 றணங்குறுவ தன்றி யருள்புரியா வேலின் இணங்கெறியு முண்க ணிணைக்கும் - வணங்கி ஒடியும் வரிசிலைநா ணுற்றிருப்ப தென்று கடியு முரிபுருவங் கட்கும் - நெடியமணி வள்ளைக் கொடிபான் மருவிலகண் ணோட்டமெனக் கொள்ளைக் கவின்கூர் குழைகட்குந் - தெள்ளுற் றுவமைகூ றக்கருதி னொன்றற்கொன் றல்லா துவமைவே றில்லா வுருவாள் - உவமை கரியகுழ லாகக் கமஞ்சூன் முகிறான் உரியபொரு ளாக வுரைப்பாள் - அரியமலர்
|
(341) |
| |
|
| |
331.30-335. நச்சப்படாத-விரும்பப்படாத. வண்டு-வளையல். வரியாழ்-இசை பொருந்திய யாழ். கண்-முலைக்கண்; சூசுகம். கனகமலை-மேருமலை.336.35-340. 341.340-345. அணங்குறுவதன்றி-துன்பத்தையடைவதல்லாமல். வேலின் இணங்க-வேலின் இணங்குாலை. உண்கண்-மையுண்டகண். வரிசிலை-வரிந்து கட்டப்பெற்ற வில். நாண்-நாணம். கடியும்-வெறுக்கும். முரி-வளைந்த. கமஞ்சூல்-நிறைந்த சூல்.
|
|
|
|