| 11. திருவெங்கையுலா |
|
| |
345 கொள்ளைகொள வெண்ணிக் குயில்கூவ நல்லாய வெள்ளமொடு சென்றுபொழின் மேவினாள் - கள்ளழியப் பூத்தகொடி தான்வருமுன் பூம்பணைகண் மீதேற வார்த்தைகொடு கிள்ளை மருங்கிரியக் - கூத்தரென ஓதி முகில்கண் டுவந்து மயிலாடத் தீதில் விழிகண்டு தேனினங்கள் - தாதில் விழுந்து படிந்துவரும் வேறாகப் பல்வண் டெழுந்துமலர் வாய்கண் டெதிரச் - செழுந்தாள வெண்ணகையாள் கண்டு விடுத்துத்தன் மூக்கையெதிர் ஒண்ணகைய சண்பகங்க ளுள்ளவெலாம் - பெண்ணரசு
|
(346) |
| |
| |
350 சென்று கவர்ந்துநனி சிக்கயாத் திட்டுமுலை என்று பெயரியவெற் பேற்றினாள் - மன்றங் குறுகியிளந் தென்றலெதிர் கொண்டிருப்பச் சேணில் உறுகொடிய தேர்தோன் றுதலும் - மறகில் நிரம்பு கதிர்நேர் நெருஞ்சியெனத் தன்பால் திரும்புவிழி யாயமொடு சென்றாள் - குரும்பைநிகர் கொங்கநீ லுண்கட் கொடிமென் றளிர்போன்ற அங்கைநீள் கூந்தலின்மே லஞ்சலித்தாள் - கங்கைநீர் பாய்ந்துதளி ராது பவள நிறக்கொழுந்தில் சாய்ந்துபடர் வஞ்சிச் சடையழகும் - வாய்ந்தசிலை
|
(351) |
| |
| |
355 ஆக்கந் தருமதவே ளஞ்சத் திலகமென நோக்கங் கிடந்த நுதலழகும் - பார்க்கும் விழியாய்க் கிடந்தசுடர் மேல்வா சிகைபோன் றழியாப் புருவத் தழகும் - பழியாப் பரசு வருங்கை பழித்தருள்வந் தெய்தி அரசு செயுங்கண் ணழகும் - வரிசைபடு தொண்ட ரகத்தமருஞ் சூளா மணிவதன முண்டகத்துக் கேற்றகொடி மூக்கழகும் - மண்டுகருத் தோடிமலை வேந்த னுலாவமுதுண் டென்கவிப்புன் காடிமுனி யாதகுழைக் காதழகும் - பீடிசைய
|
(356) |
| |
|
| |
346.345-350. மருங்கிரிய-பக்கத்திலே ஓட. ஓதிமுகில்-கூந்தலாகிய முகில். தரளவெண்ணகையாள் முத்தைப் போன்ற வெள்ளிய பற்களையுடையவள். 351.350-355. சிக்கயாத்திட்டு-நன்கு அகப்படுமாறு கட்டி. சேணில்-தொலைவில். அங்கை-அழகிய கையை. 356.355-360. பரசுவருங்கை-மழுப்படை பொருந்திய கை. வரிசைபடு-முறைமை பொருந்திய. வதனமுண்டகம்-முகத்தாமரை. மலைவேந்தன்உலா-சேரமான் பாடிய திருக்கைலாய உலா. பீடிசைய-பெருமை பொருந்த.
|
|
|
|