| 11. திருவெங்கையுலா |
|
| |
360 ஆத்தமொழி யாகவனைத்தும் பயில்வேத வார்த்தை மொழியுமலர் வாயழகும் - ஏத்துறுதன் ஏவ லிருக்கு மினையவர்மேற் சென்றவிடங் காவ லிருக்குங் கழுத்தழகும் - நாவல் விலங்கறான் றிண்மை விடுத்து வணங்கும் அலங்கறாழ் திண்டோ ளழகும் - இலங்க எடுத்தமழு மானபய மேனை வரதம் அடுத்தமல ரங்கை யழகும் - வடித்தகதிர் வேறா மெனுங்கண் விளங்கிழைகொங் கைத்தழும்பு மாறா வணியினுறு மார்பழகும் - நூறாய
|
(361) |
| |
| |
365 எண்ணிற் சிறந்த விதழ்மலரா டாழுநெடுங் கண்ணிக் கணையாங் கவானழகும் - நண்ணிக் குடித்தாவி கூற்றெங் குடிமுழுது மாட்கொள் அடித்தா மரையி னழகுங் - கடித்தாம மென்முலைகண் ணிற்கு விருந்திட் டமையாது நன்மணிமுத் தும்புனைய நல்கினாள் - பொன்மலையை வாரொழுகுங் கொங்கைபெறும் வண்ணத்தா னுங்கடந்தாள் போரொழுகும் வேளாற் பொலிவழிந்தாள் - சீரொழுகும் வைத்தமணி கண்டன் வதனத் தொடுவதனம் வைத்துமுலை வேழமலை மார்புபொர - நெய்த்தகுழல்
|
(366) |
| |
| |
370 மாது தழுவ மனங்கொண்டு பித்தளையச் சூதுபொரு சந்தமுலைத் தோழிமார் - மூதுலகில் ஆடவர்க டம்மி லழகனா மாயோனும் பீடமையு மைத்தடங்கட் பெண்ணுருவாய்க் - கூட இருந்த பெருந்தகையை யெங்குலப்பெண் வேட்டு வருந்தறகு மென்று மதித்து - விரைந்து மனையிற் கொடுபோய் மலரணையிற் சேர்த்த வினைவுற் றுயிருண் டிலையென் - றனைவர்க்கும் ஐயம் விளைய வவள்சோர்ந்து பின்றெளிவுற் றுய்யும் வகையே துரைமினென்றாள் - ஐயன்
|
(371) |
| |
| |
375 உருவெளியைக் கண்டா ளுழையரைச்செல் கென்றாள் அருவெளியைப் புல்கி யுயர்ந்தாள் - பொருவெளியர் அல்லரா மாத ரறிஞர்க்குத் தாமல்ல தில்லரா யாண்டு மெதிர்நிற்க - வல்லராம் ஈச ரிவட்கு மெதிர்நின்றா ரென்றிருப்பப் பாசமில னாதி பகவன்றேர் - வாசவன்றான் முன்னிறுத்த வஞ்சிறகர் மூரிவரை யூர்வதெனத் தன்னிலைப்பொன் வீதிதனிற் சார்ந்ததால் - பின்னொருத்தி பேரிளம்பெண் கண்ணிற் சிறந்த கருமணிபோல் வானவர்தம் பெண்ணிற் சிறந்தவொரு பேரிளம்பெண் - விண்ணிற்
|
(376) |
| |
|
| |
361.360-365. ஆத்த மொழி-உறுதி மொழி. இமையவர்-தேவர். நாவல்-நாவலந் தீவு. விலங்கல்-மலை. அலங்கல்-மாலை. மடுத்த-பொருந்திய. வடித்த கதிர்வேல்-கூராக்கப்பட்ட ஒளி தங்கிய வேல். மாறா-நீங்காமல். 366.365-370. கவான்-தொடை. வார் ஒழுகும்-கச்சுப் பொருந்தும். மைத்தமணி-நீலமணி. 371.370-375. சூது-சொக்கட்டான் காய். வேட்டு-விரும்பி. 376.375-380. உருவெளி-பொய்யான தோற்றம். உழையரை-அண்மையில் உள்ள தோழியரை. வாசவன்-இந்திரன் பெண்ணில்-பெண்களுக்குள்.
|
|
|
|