| 11. திருவெங்கையுலா |
|
| |
380 குருமதிதா னொக்குமெழில் கூர்முகத்தை யொக்குந் திருமலரி னாண்மலர்வு தீர்த்துப் - பொருமதர்வாட் கண்ணொக்கு நீலக் கடிமலரை வாழ்விக்கப் பண்ணொக்கு மின்சொற் படியிலாள் - விண்ணிற் கிருசுடரின் மற்றொன் றெழின்முகமொவ் வாமல் ஒருசுடர் மன்பொற் பழிப்பவுள்ளாள் - பொருசுடர்வேல் மாவடியை நோக்கி வரலொத்துக் காதளவுந் தாவடிபோய் மீளுந் தடங்கண்ணாள் - காவடிபோல் கண்ணுங் குழைதூங்கு காதுமுறத் தங்குநரின் நண்ணுங் குமிழ்வென்ற நாசியாள் - எண்ணும்
|
(381) |
| |
| |
385 முகைமுதல வெல்லா முறையொத் துவமைத் தகைதவிர முற்றுந் தனத்தாள் - பகைமலரின் உற்றமட வாரு ளொருவரே கல்விகவின் பெற்றிடினன் றொவ்வாப் பெருமையாள் - பொற்றகடு வேய்ந்தபவ ளக்கால் வியன்மா ளிகையொன்றில் ஆய்ந்த புராணநூ லந்தணனை - வாய்ந்த மடங்கலணை யுய்த்து வணங்கி மருங்குற் றடங்கலரூர் தீமூட்டு மண்ணல் - தொடங்குகதை ஒன்றோ துகவென் றுரைப்பவவ னோதுவான் அன்றோர் பகன்முக்க ணாண்டகைதான் - குன்றோ
|
(386) |
| |
| |
390 டிணங்குமுலைப் பெண்ணாத லேலாமை யின்மால் அணங்குருவப் பெண்வடிவ மாகிக் - கணங்கொள் முனைவர் தவமிழந்து மோகிப்பான் செல்ல அனையர் மகளீ ரமர்ந்த - மனையில் பலிமுகத்தா னாகிப் பலிக்கெய்த வானம் புலிமுகத்தா ரெம்மான்முன் போந்தார் - கலிமுகத்துப் புன்றுரும்பு போன்றலைந்தார் போற்றுமவி காரிமுனஞ் சென்று வருசொற் றிரிதல்போல் - மென்றளிராம் மேனி திரிந்தார்கை வெள்வளைகள் போக்கினார் வேனின் மதன்கணையால் வெய்துயிர்த்தார் - பானுரைபோல்
|
(391) |
| |
|
| |
381.380-385. திருமலரின் நாண் மலர்வு தீர்த்து-செந்தாமரை மலரின் அன்றலர்தலை யொழித்து. பொற் பழிப்ப-அழகைக் கெடுக்க. தாவடிபோய்-போருக்குச் சென்று. தடம்-பெரிய. 386.385-390. வியன் மாளிகை-சிறந்த மாளிகை. மடங்கலணை-அரியணை. அடங்கலர்-அடங்காதவர்களாகிய பகைவர்கள். 391.390-395. ஏலாமையின்-முடியாதபடியினால்.முனைவர்-முனிவர். போற்றும்-யாவரும் புகழும். வெள் வளைகள்-வெள்ளிய வளையல்கள். வெய்துயிர்த்தார்-பெருமூச்சு விட்டார்.
|
|
|
|