முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
11. திருவெங்கையுலா
395   ஆடை குலைந்தா ரணைந்தாவி தாரீரென்
     றேடவிழ்பூந் தாண்முன் னிறைஞ்சினார் - நீடழலில்
     காட்டு மரக்கிற் கருத்துக்கா ரென்னவுயிர்
     கூட்டுண் மலர்க்கட் கொடியிடையாள் - கேட்டு
     மடவார்கட் கெல்லாம் வசைவிளைத்தா ரென்றச்
     சடைவா னவன்றானென் றன்பால் - அடைவானேல்
     நாவனகர் நம்பிபெரு நன்மணப்பூம் பந்தரிடைப்
     பாவலர்முற் கூறும் பழிமொழியை - யாவர்களும்
     கூற வெருக்கணிந்த கோல முதவியா
     ஏறமடன் மாவையெளி தேற்றுவலென் - றூறமுதம்
(396)
400   அன்ன மொழியா லறைதலுமுக் கட்கனிமுன்
     சின்ன முனிமகளிர் சிந்தைகவர் - தன்னனையான்
     வந்தா னெனமுழங்க மாதெண்ண முற்றியதென்
     றந்தா மரைத்தா ளணிசிலம்ப - முந்தா
     இறைவனெதி ரேற்றா ளெழிற்பெருக்கங் கண்ணால்
     குறைவ தறமுகந்து கொண்டாள் - கறைமிடற்றுப்
     பண்ண வனைமொழிந்த பாவ முடன்பலித்து
     வண்ணநறுந் தூசு வளையொழியக் - கண்ணிணையுள்
     நீர்பெருக நெஞ்ச நிறையழிய மென்முலைகள்
     பீர்பெருகச் செவ்வாய் பிழைபிதற்ற - ஏர்பெருகு
(401)
405   மாதவர்த மாதருற்ற வாறுமின்றிக் கயைாற்றில்
     சாதலுறு வார்போற் றனைமறந்தாள் - கோதையாள்
     தானோ பழமலையைச் சார்ந்தசைப்பா ளென்றுமொழித்
     தேனோ வெனுஞ்சொற் றிருமுகத்தில் - வானோர்
     தனிநா யகன்முடியிற் றண்புனலீ தென்று
     பனிநீர் தெளித்தணிப்பப் பாவை - முனியாள்
     உணர்ந்தவச நீங்கி யொழிந்தாள் வளைகள்
     புணர்ந்த முலைபசலை பூத்தாள் - கொணர்ந்த
     தொடைபொடிப்ப வெண்டரளஞ் சுண்ணம் படமெய்
     யிடையடுத்தார் நீங்குவெதுப் பேற்றாள் - சடையடக்கக்
(406)

396.395-400. குலைந்தார்-கலையப் பெற்றார்கள். அணைந்து-சேர்ந்து. ஆவி-உயிர். நாவல்நகர்-திருநாவலூர். நம்பி-சுந்தரர். மடன்மா-பனங்கருக்காற் செய்த குதிரை. 401.400-405. கறைமிடற்றுப் பண்ணவன்-சிவபிரான். வண்ண நறுந்தூசு-அழகிய நல்ல ஆடை. பிழை பிதற்ற-பிழையான சொற்களைப் பேச. 406.405-410. மாதவர்தம் மாதர்-தாருகாவன முனிவர்களின் மனைவிமார். அவசம்-மயக்கம். புணர்ந்த-நெருங்கிய. வெதுப்பு-வெப்பம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்