11. திருவெங்கையுலா |
|
|
410 கங்கைநீ ரன்றேயிக் கண்ணீ ரெனவழுதாள் பொங்கெரியின் வீழ்பறவை போன்றினைந்தாள் -மங்கையர்கள் சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயலென்று - மெல்லியலைக் கொண்டு மனையிற் குறுக மலருண்டு வண்டுபடுங் கூந்தன் மலர்விழியாள் - பண்டு திருமாலு நான்முகனுந் தேடும் பொருளைக் கருமா மிடற்றெங் கரும்பைப் - பெருமானைத் தெள்ளமுதைத் தெய்வ சிகாமணியைத் தன்னடியார் உள்ளுயிரைத் தோன்றா வுறுதுணையைக் - கள்ளவிழுங்
|
(411) |
|
|
415 கொன்றைப் பவளநெடுங் குன்றைப் பழமலையை மன்றிற் குனிக்குமொரு மாமணியைச் - சென்றுற் றுளத்துப் புணர்ந்துவிடா தோங்கின்ப முற்றாள் கிளத்தற் கரியபெருங் கீர்த்தி - வளத்தொடுறும் நாடு நிலைநிற்ப நம்பன் செலுத்தப்போய் நீடுதிருத் தேர்நிலையி னின்றதால் - ஆடு படைக்கண் மகளிர் பலரிவ்வா றாகக் கடைக்க ணருள்சிறிது காட்டிச் - சடைக்கண்
|
(416) |
|
|
416 நிலாவினான் வெங்கை நிலையினா னாதி யுலாவினான் போந்தா னுலா. நேரிசைவெண்பா பேதை முதலாகப் பேரிளம்பெண் ணீறாக ஓதை யெழுகடல்போ லோங்கினோர் - காதலுறச் சிந்தா மணிநெடும்பொற் றேரிற் றிருவுலாத் தந்தான் பழமலைநா தன்.
|
(421) |
|
சிறப்புப்பாயிரம்
நேரிசைவெண்பா |
|
|
வெங்கைப் பதிப்பழய வெற்புக் கணிமுழுதுந் தங்கத் திருவுலாச் சாற்றினான் - சங்கத்துப் போற்றுந் தமிழ்நூல் பொதுக்கடிந்தா னென்றுலகஞ் சாற்றுஞ் சிவப்பிரகா சன்.
திருவெங்கையுலா முற்றிற்று. |
(422) |
|
|
|
411.410-415. இனைந்தாள்-வருந்தினாள். கருமா மிடறு-மிகக்கரிய கழுத்து. மன்றில் குனிக்கும்-பொன்னம்பலத்தில் ஆடும். கிளத்தற்கு-கூறுதற்கு. நிலாவினான்-திங்களை யணிந்தவன். ஆதியுலாவினான்-சேரமான் பெருமாளால் பாடப்பெற்ற ஆதியுலாவை யுடைய சிவபெருமான்.
|
|
|
|