1. சோணசைலமாலை |
|
|
ஏணுறு மமரர் கடைகட லளித்த விருளொடு மணிமிடற் றடியேன் ஆணவ விருளுங் கலந்திடிற் கருமை யழகுமிக் கிலங்குறுங் கண்டாய் மாணெழில் வராக முழும்புழை யனந்தன் மணியொளிப் பிழம்பெழல் சிறுதீத் தாணுவின் முருக னெழுதனேர் சோண சைலனே கைலைநா யகனே.
|
(42) |
|
|
மின்னவிர் சடிலக் கற்றையு மருள்கூர் விழிகளுந் திருமுகத் தழகுங் கன்னவி றிரடோ ணான்குமீ ரடியுங் கண்டுகண் களிக்குநா ளுளதோ இன்னிசை யொலிகேட் டுருகுதல் கடுப்ப விழிதர வருவிகிம் புருடர் தன்னிக ரிசைகூர் சாரலஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(43) |
|
|
அள்ளிவெண் டிருநீ றுடன்முழு தணியு மடியவர்ப் பெறினெழுந் திளங்கன் றுள்ளிநின் றுருகு மன்னையின் மனநெக் குருகுபு சென்றிறைஞ் சிலனே எள்ளிவெம் புலியெண் கரிதிரு மேனி யேறுத றகாதென வெகுண்டு தள்ளிவந் தருவி யிழிதனேர் சோண சைலனே கைலைநா யகனே.
|
(44) |
|
|
இழையெனத் தளர்சிற் றிடையுணா முலையா ளெனக்குவண் புகலிவேந் தயின்ற கழுமணிப் பசும்பொற் குலவுபாற் கிண்ணங் கழுவுநீர் வார்ப்பதற் குரையாய் முழையிடைக் கதிர்மா மணிவிளக் கேற்றி முசுக்கலை பிணாவொடு மசோகத் தழையிடைத் தழுவி யுறங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(45) |
|
|
|
42. மணியொளித் திரட்சி, பெரிய தீத்தம்பமாயமரும் சிவபெருமானருகே சிறிய தீத்தம்பமாக முருகக் கடவுளெழுதலொக்கும் என்பது. இருளொடு கலந்திடில் மிடற்றுக் கருமை யழகு மிக்கிலங்குறும் என இயையும். மிடற்றுக் கருமை நஞ்சினால் ஆகியது. ஏண்-உயர்ச்சி. அனந்தன்-ஆதிசேடன். 43. சடிலம் என்பது சடை; “கல் நவில்” என்பதில் நவில் என்பது உவமவுருபுமாம்; இறைவனது உருவ அமைப்புகளின் அழகைப் பார்த்து மகிழ வேண்டும் என்பது கருத்து. 44. தள்ளி வந்திழிகலொக்கும் அருவி யென்க. பெறின்-காணப் பெற்றால். எள்ளி-இகழ்ந்து. 45. முசு-குரங்கினுளொரு சாதி. கலை-ஆண். பிணா-பெண். பிணாவொடுஉறங்குறுமென இயையும். அயின்ற-உண்ட.
|
|
|
|