முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
வினைவழி யுடலிற் கமைந்துறு முணவே
      வேண்டினர் வினைகொடு புணரா
நனைமலர் புனைநின் றிருவடி யடைவா
      னாடொறும் வேண்டில ருலகர்
கனையிருள் கரந்த விடமறிந் துணப்போங்
      காட்சியிற் புனக்கிளித் தொகுதி
தனையெறி மணிகண் முழைபுகுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(46)
மாங்குயின் மிழற்று நாவலூர்ப் புலவன்
      மறுப்பவு முடிமிசை யிருத்தும்
பூங்கழ லடியேன் றலைமிசை யிருத்தப்
      புகலினு மென்கொனீ யிரங்காய்
ஓங்குறு மண்ட கோளகை யளவு
      முயர்ந்துமோர் மழவிடை முதுகில்
தாங்குபு நடக்க விருந்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(47)
ஈரமு மருளு மொழுக்கமுஞ் சால்பு
      மின்சொலு மிந்தியப் பகைவெல்
வீரமு மருளி யெனதுவெம் பிறவி
      விலக்கியாட் கொள்ளுநா ளுளதோ
ஆரமு மகிலுந் தடிந்துசெம் மணிக
      ளரித்தெறிந் தெறுழ்வலிக் குறவர்
சாரலி னிறுங்கு விதைக்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(48)

46. அருளாற்புணர்க்கப்பட்ட அடியென்பார் வினைகொடு புணராத் திருவடி யென்றார். கொண்டு என்பது ஆல் உருபின்மேற்று. கனை-நெருக்கம். இருட்கு இடமாகலின் முழையை இருள்கரந்த விடமென்றார். கனையிருள்-பேரிருள். கரந்த-மறைந்த. 47. நாவலூர்ப் புலவர் மறுத்தது திருவதிகையின் அருகுள்ள சித்தவட மடத்தில். மிழற்றும்-இசைபாடும். மழவிடை-இளமை பொருந்திய காளை. 48. எறுழ்வலி-ஒரு பொருட் பன்மொழி. இந்தியம் என்பது ஐம்பொறிகள் அவை மெய் வாய் கண் மூக்குச் செவி என்பன. பிறவி துன்பத்துக் கிடஞ்செய்தலால் ‘வெம்பிறவி’ என்றார். ஈரம்-இரக்கம். ஆரம்-சந்தனம். தடிந்து-வெட்டி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்