முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
12. இட்டலிங்க அபிடேக மாலை
நாடரிய சத்தியோ சாதத்தும் வாமத்து
        நன்றா மகோரத்தினு
    நவையற்ற புருடத்து மாகமமொ ரைவ்வைந்து
        நல்கியீ சானத்திலே
பீடுதரு மெட்டுமுறை தந்தவற் றிடைநீசொல்
        பெருமைபெறு மருமைவிதியிற்
    பேசரிய பூசைசிவ கோசரியெ னப்புரிதல்
        பெற்றிலேன் மற்றடியனேன்
வேடுவர்கு லத்தலைவன் மெய்யன்பு பூண்டிலேன்
        வேட்டொருவர் மாட்டருளினான்
    மீக்கொளொரு புடையொப்பு நோக்கிவைத் தனைசாற்றின்
        வேண்டல்வேண் டாமையிலையால்
ஆடுநின் பால்வேறு பாடொன்றி லாமையா
        லபிடேக மாடியருளே
    அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை
        யபிடேக மாடியருளே.
(2)
நவிற்றலரு மிதயமிளிர் கண்டநா வடிபுருவ
        நடுவுபிர மப்புழையெனு
    நல்லிடத் தகராதி கிரியாதி மனமுதல
        நண்ணியு மைம்மூவகை
இவற்றிலொவ் வொன்றகல நின்றவிட யங்களெதிர்
        வின்றிச்சி வாகாரமா
    எதிருநன வுஞ்சோக மென்றுபா வித்தலுறு
        மென்கனவு ஞாதுருவொடே
உவப்பறிவு ஞேயமென வுற்றனுப வித்திடு
        மொண்சுழுத் தியுஞானமே
    ஒளிர்துரிய முந்திளைத் துயர்சிவா னந்தநுகர்
        வுறுமதீ தமுமாகுநல்
அவத்தைகள் கடந்தவற் றப்புறப் படுமமல
        னபிடேக மாடியருளே
    அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை
        யபிடேக மாடியருளே.
(3)

2. ஆகமோற்பவ வகைகளும் அவற்றில் விதிக்கப்படும் விதிமார்க்கம் பத்திமார்க்கம் இரண்டானும் முத்தியுண்டாமென்பதையும்இச்செய்யுள் விளக்குகிறது. சிவகோசரியார்-திருக்காளத்தியில் கண்ணப்ப நாயனார் காலத்தில் வாழ்ந்திருந்தவர். வேடுவர் குலத் தலைவன்-கண்ணப்ப நாயனார். 3. நின்மல பஞ்சாவத்தை யினியல்பையும், சிவம் அவற்றிற்கும் அதீதப்பட்டதென்பதையும் இச்செய்யுள் கூறுகிறது.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்