| 12. இட்டலிங்க அபிடேக மாலை |
|
| |
ஒருவனோர் பொருளிலாற் குற்றுதவி னுளம்வியந் தோகைபெறு மன்றியுடைமை உதவுறா வமையத்தி லுதவினுந் தன்னிடத் துள்ளதிற் பெரிதளிக்கும் பொருளதா யினுமதனி னினியதா யினுமவன் புந்திமகிழ் வுற்றிடுவனால் புனல்விடுத் திடுமுடியி னிற்புணரி யிற்பெருகு புண்ணியத் தெய்வநதிதான் மருவலா னீர்விருப் பிலைநினக் கொருதிவலை மற்றென்முடி யிற்றெறிப்பின் வைப்பன்வா னத்தினென வெத்திறத் தானுநினை மக்கணினை வுற்றுய்ந்திட அருளினான் முனம்விதித் தவனாத லான்மகிழ்ந் தபிடேக மாடியருளே அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை யபிடேக மாடியருளே.
|
(4) |
| |
| |
கருகிச்சி வந்தகடு வருகிப்பொ ருந்தமிளிர் களம்வாழ்வு மேவவணிவாய் கடலிற்சி றந்தநிற வுடலிற்றி ருந்துமணி கதிர்போல வேயுநெடுமால் ஒருகட்கி சைந்தவடி யிருகட்கி ணங்கவற முடையார்மு னோடிவருவாய் உலகத்தை வென்றமன மிலகுற்ற மன்றினிடை யுமைகாலா வாடல்புரிவாய் மருகற்பெ ரும்பதியி லொருகற்ப ணங்குதொழ மணவாள னாவியுதவா மயிலைக்க ணென்பினுயிர் பயில்வுற்றெ ழுந்துவர வருவாயெ னாமுனழையா அருகர்க்க ணங்குதரு முருகர்க்கு கந்தவர னபிடேக மாடியருளே அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை யபிடேக மாடியருளே.
|
(5) |
| |
|
| |
4. பெருமானுக்கு ஒன்றினும் விழைவில்லையாகவும் ஆன்மாக்கள் உய்யும்பொருட்டு ஆகமங்களில் ஆராதனை விதித்ததை இச்செய்யுள் கூறுகிறது. ஓகை-உவகை. 5. சிவபிரானின் அநுக்கிரக நிக்கிரகத்தன்மை இச்செய்யுளிற் கூறப்படுகிறது. கடு-நஞ்சு. களம்-கழுத்து. வேயும்-அணியும். மன்றினிடை-அம்பலத்தில். மருகல்-திருமருகல். மயிலைக்கண்-திருமயிலாப்பூரில். என்பினுயிர்-பூம்பாவையினுடைய உயிர். அணங்கு-வருத்தம். முருகர்க்கு-முருகன் கூறான திருஞானசம்பந்தருக்கு.
|
|
|
|