| 12. இட்டலிங்க அபிடேக மாலை |
|
| |
போயகுல மொடுசரண ரொடுமேவு சமயமும் பொன்றுலகம் விட்டமலனார் பூசனைகொ ளரியநிர்ச் சஞ்சார முங்கொடிய பொன்பெண்மண் ணாசைநெறியில் பாயமன மோடாத நிட்பிரா ணமுமெய்ம்முப் பத்தாறு தத்துவமறப் பகுதியொடு ணர்த்துதத் துவமுமிறை யஞ்சனீ பாரென்னு மான்மிகமுமே மேயசடு லிங்கமுட னாறங்க மாகமொரு மெய்யனுக் கிரகநிலையும் விமலமுறு சச்சிதா னந்தசிவ மயமென்னு மிக்கசத் தியசுத்தமும் ஆயவெழு வகைநெறியி னாவியிடை யிலகுமர னபிடேக மாடியருளே அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை யபிடேக மாடியருளே.
|
(7) |
| |
| |
கிடைத்தசிவ லிங்கமன் றுணராத வேகாக் கிரசித்த மென்னும்விரதங் கெடாததிட விரதம்விட யங்கள்சிவ னுக்குதவு கின்றவிந் திரியார்ப்பிதம் உடற்றியுயிர் கொன்றிடா நின்றிடு மகிஞ்சைசிவ னுண்மைகொ ளிலிங்கநிசமே உயர்சிவத் துளமடங் குறுமனோ லயமதனி லொன்றாகி நின்றுபேதம் விடுத்தலுறு சத்தியோன் முத்தியெனு மிவையேழு மிக்ககுரு வருள்புரியவே மேவலரு மெய்ஞ்ஞான பாவநிலை மேவியிடும் வேதமுடி யாவுமுணரா தடுத்தமன மொழியுடற் கப்புறப் படுமமல னபிடேக மாடியருளே அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை யபிடேக மாடியருளே.
|
(8) |
| |
|
| |
7. வீர விசேடருக்குச் சூக்கம தனுவிற் செய்யப்படும் பிராணலிங்க எழுவகைத் தீக்கை இச்செய்யுளில் கூறப்படுகிறது. பாயமனம்-பல பொருள்களிலும் பாய்ந்து செல்லும் மனம். அஞ்சல்-அஞ்சாதே. 8. வீரநிராபரருக்குக் காரணதனுவிற் செய்யப்படும் பாவலிங்க எழுவகைத் தீக்கை. ஏகாக்கிரசித்தம்-ஒருவழிப் பட்ட மனம். உடற்றி-செய்து. அகிம்சை-பிறவுயிரை வருத்தாமை.
|
|
|
|