12. இட்டலிங்க அபிடேக மாலை |
|
|
நல்லதில நெய்யாடி யானிடத் தைந்தாடி நவையிலை யமுதமாடி நல்குகா ரணகாரி யம்முறையி னன்றியே நறுநெய்பா றயிராடியே மெல்லமலர் மதுவாடி யின்கழைச் சாறாடி மென்பழச் சாறாடியே விழையுமிள நீராடி யாரக்கு ழம்பாடி விதியினமை நபனமாடி ஒல்லைநகு வெண்டலைப் புழையினிடை யோடிநல் லுத்திகொடு பைத்ததலைய வுரகநுழை வுறவிளங் குழவிமதி யொருபுடை யொதுங்கவிட மின்றியசைய அல்லலற நிறைகங்கை யசையாது நிற்பைநீ யபிடேக மாடியருளே அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை யபிடேக மாடியருளே.
|
(9) |
|
|
நரர்கடமி னரசரவர் தமினினிய திவவியாழ் நண்ணுநர கந்தருவர்தா நவிலுமவர் தமினமர கந்தருவ ரவர்தம்மி னாடரிய தேவரவரில் சுரரதிப னவனினுயர் சுரர்குரவ னவனினயன் சொன்முறையி னூறுமடிமேற் றுன்னுசுக மொருதிவலை யளவுமின் றாகமிக சுகவேலை புகலீகுவாய் தரைமுதற் பூதங்கள் புத்திகுண தத்துவந் தகுதிபெறு பகுதிபுருட தத்துவம் வித்தைமுத லனவெனுமி வற்றிலறு சமயரென வெமைவிடாமல் அருளினினை யடைதலுறு மரியபவ மருளுமவ னபிடேக மாடியருளே அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை யபிடேக மாடியருளே.
|
(10) |
|
|
|
9. இச்செய்யுளில் அபிடேகங்கொள்ளு முறைமை கூறப்படுகிறது. திலநெய்-நல்லெண்ணெய். ஆன்-பசு. நவை-குற்றம். இல்-இல்லாத. ஐயமுதம்-பஞ்சாமிர்தம். மலர்மது-தேன். கழைச்சாறு-கரும்புச் சாறு. ஆரக்குழம்பு-சந்தனக் குழம்பு. நபனமாடி-நீராடி. உரகம்-பாம்பு. 10. சிவானந்தத்தின் உயர்வும் சைவ ஆணெறிச் சிறப்பும் இச்செய்யுளிற் கூறப்படுகிறது. நரர்கள்-மனிதர்கள். திவலை-துளி. வேலை-கடல்.
|
|
|
|