முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
13. நெடுங்கழிநெடில்
கட்டழ கமைந்து காளையம் பருவங்
        கடந்திடா துள்வலி யுடைத்துக்
    கலங்கல்செய் பிணியின் றியன்றயாக் கையராய்க்
        கல்வியங் கடல்கடந் தவராய்
நட்டவர் விரும்பு மாறுநீ செய்ய
        நடக்குநா ளுடல்வெறுத் துனையே
    நம்பியா ரூரன் முதலியோர் நண்ண
        நானுடல் விடுமென வழிவேன்
பட்டிருள் விழுங்க வலர்கதி ரவனும்
        பனிமதி யோடுயிர்த் தொகையும்
    பார்புனல் சுடுதீ வளிவிசும் பென்னப்
        பட்டவைம் பூதமு மாகும்
எட்டுரு வடைந்து முருவமொன் றின்றி
        யிற்றென வுணர்வரும் பொருளே
    இட்டநன் குதவி யென்கரத் திருக்கு
        மீசனே மாசிலா மணியே.
(2)
மனமெனும் வயமா வென்வயப் படாமன்
        மயங்குறு மைம்புல வீதி
    மறிபடா தோடு கின்றது முறையோ
        மறித்ததை நிறுத்தியென் றனக்கு
நினையல துதவு வாரிலை யதனா
        னினைப்பர வுற்றன னதனை
    நிறுத்திநீ யிவர்ந்து பின்னர்நீ வேண்டு
        நெறிகளிற் சென்றிட விடுவாய்
கனலுறு மெழுகி னெஞ்சநெக் குடைந்து
        கரையில்பே ரன்பெனும் வெள்ளங்
    கண்வழி புறப்பட் டென்னநீர் வாரக்
        காலங்க டொறும்வழு வாமல்
இனமலர் தூவு மடியவ ருள்ளத்
        திருள்கெட வெழுந்தபே ரொளியே
    இட்டநன் குதவி யென்கரத் திருக்கு
        மீசனே மாசிலா மணியே.
(3)

2. அமைந்து கடந்திடாது இயன்ற யாக்கையெனக் கூட்டுக. இத்தகைய யாக்கை முதலிய உடையராய்த் தோழமை பூண்ட.நம்பியாரூரர் முதலியோர் விரும்பியவாறு செய்யத் தேவரீரே வலிந்து செல்லுங் காலத்தும் அவர் அவ்வரிய யாக்கையையும் வெறுத்துத் தேவரீரையே நண்ண; யான் இவ்விழிவுடல் நீக்கத்திற்கு அழிவேன். இங்ஙனமாயின் எங்ஙன முய்வேன் என்பது. இற்றென-இத்தன்மைத்தென. 3. வயமா-வலிமை பொருந்திய குதிரை. மறித்து-தடுத்து. பரவுற்றனன்-போற்றலானேன். இவர்ந்து-ஏறிச் செலுத்தி. கனல்-தீ.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்