13. நெடுங்கழிநெடில் |
|
|
நிலங்கடந் தவன்முன் னறுமலர் சாத்த நிகரிலம் மூர்த்திமுன் சந்து நினக்கணி வுறவாட் டாயர்முன் னிருந்து நிவேதனம் புரிந்திட் வன்று நலங்கிளர் கலையர் கலியர்முன் றூப நல்விளக் களிப்பநின் றன்னை ஞானசம் பந்தப் பிள்ளைமுன் பாட நாணிலேன் பூசனை புரிவேன் விலங்கினுங் கடையர் வளர்த்தசெந் தீயின் விரைந்தெழும் வாள்வரி வேங்கை விடுப்பவங் கதுவந் தெதிர்ந்திட விகழ்ந்து விடாததன் றோலுரித் திருள்கொண் டிலங்கொளி யிரவி யனையமெய்ப் படுத்த விறைவனே யநிட்டநின் றகற்றி இட்டநன் குதவி யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.
|
(4) |
|
|
மூக்கிடை யிரண்டு விழிகளே றுதன்முன் முடங்குகைக் கோலொரு காலா முன்னநின் றிருவாய் மலர்ந்தருள் செய்த முதிர்கலைப் பொருள்படித் தவராய்க் கார்க்கடன் முகட்டி னிரவிவந் தெழுமுன் கடிதுசென் றணிமலர் கொய்துன் கழற்கிடார் பிறப்பி னாய்ப்பிறப் பினிது கற்றவ ரிகழ்ந்திடா மையினால் நோக்கற நோக்கு முருவமே நாவா னுகர்ந்திடா வினியபே ரமுதே நுதல்விழிக் கனியே கறைமிடற் றரசே நுவலரு மாயையிற் பிறவா யாக்கைய துடைய வருட்பெருங் கடலே யெழுந்தொடுங் காதவான் சுடரே இட்டநன் குதவி யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.
|
(5) |
|
|
|
4. உலகையளந்த திருமால் முதலானவர்கள் நறுமலர் சாத்தல் முதலிய ஒவ்வொருதொண்டையே மேற்கொண்டொழுகாநிற்க. அவர்முன் நாணமில்லாமல் அத்தொண்டனைத்தும் ஒருங்குடையதாகிய உமது பூசையைச் செய்கிறேன் என்பது. இறைவரையழிப்பான் வேள்வி செய்து புலி முதலியவைகளை விடுத்தமைபற்றித் தாருகாவன முனிவரை விலங்கினுங்கடையரென்றார். மூர்த்தி-மூர்த்தி நாயனார். வாட்டாயர்-அரிவாட்டாயர். அநிட்டம்-இட்டமின்மை. 5. மூக்கிடை விழிகளேறல்-காட்சி மழுங்கக்கண் சுருங்கல். கார்க்கடல்-கரியகடல். கழல்-திருவடி.
|
|
|
|