| 14. குறுங்கழிநெடில் |
|
| |
அன்பினுக் கன்றி நான்புனை மலருக் கருளுவை யலைமலர்க் கருளின் முன்பெடுத் தெறிந்த சாக்கியன் கல்லின் முருகலர் மிகவுமின் னாதோ துன்பமுற் றிடுசிற் றின்பவெவ் விடயந் துறந்துளோர் மனத்தெழு தருபேர் இன்பநற் கடலே யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே,
|
(7) |
| |
| |
ஆடுற வடியேன் புதுக்குடந் தருநீ ரன்பன்வாய்ப் புனலுனக் காமோ கூடையின் மலர்பித் தையிற்றரு மலரோ கூறுமென் கவியவன் மொழியோ நாடரு மொருநீ யிறையெனும் வழக்கை ஞானசம் பந்தனாற் றிட்ட ஏடுரை செய்ய வென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.
|
(8) |
| |
| |
மெய்யுறு பிணிக்கு விலக்குவ வொழித்து விதித்தன கொள்ளுவன் பிறவி மையுறு பிணிக்கு மவ்வகை செயாமல் வருத்துமந் நோயிடைப் படுவேன் பெய்யுறு வளைக்கைத் திருநுத லுமையாள் பெருவிழிக் கணைகொடு விடாமல் எய்யுறு முரத்தோ யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.
|
(9) |
| |
| |
சரிப்பினு மொருபா லிருப்பினு முறக்கச் சார்வினும் விழிப்பினு மொருசொல் உரைப்பினும் போக நுகர்வினு மாவி யொழிவினு நின்னையான் மறவேன் விருப்புறு மலரும் விரையுமே போல விம்மியெங் கணுமுறு பொருளாய் இருப்பினு மரியோ யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.
|
(10) |
| |
|
| |
7., அலை-அல்லை, முருகலர்-மணம் பொருந்திய மலர், 8. ஆடுற-நீராட. அன்பன்-கண்ணப்பன். பித்தை-கூந்தல். 9. மெய்-உடல். மையுறு-மயக்கம் பொருந்திய. பெய்யுறு-இடப்பட்ட. உரத்தோய்-மார்பையுடையவனே. 10. சரிப்பினும்-சுற்றித் திரிந்தாலும். ஆவி யொழிவு-சாக்காடு.
|
|
|
|