15. நிரஞ்சனமாலை |
|
|
[நிரஞ்சனம் என்னும் வடசொல் நிறைவு இருளின்மை ஆகிய பொருள்களைக் குறிக்கும். ஈண்டு மெய்யறிவு நிறைவை உணர்த்தி நின்றது. கட்டளைக்கலித்துறையால் முப்பத்தொரு பாடல்களில் அமைந்த இம்மாலை அறிவின்மையைப் போக்கி மெய்யறிவைத்தர மேண்டுமென்று வேண்டுவது.] |
|
|
|
கட்டளைக்கலித்துறை |
|
|
நிரஞ்சன சூனிய நிட்கள மாகியந் நிட்களத்தின் வருஞ்சிவ சித்துச்சின் னாதவிந் துக்களை மன்னியொன்றாய் அருஞ்சுட ராயக ராதிப் பிரணவ மாகிநின்று தருஞ்சகம் யாவுமென் கையா லயத்திற் றனிமுதலே.
|
(1) |
|
|
குருவாகி முத்தனு விற்கிரி யாதிகள் கொண்டொருமூன் றருவாய் மலமொழித் தாவிகண் மூவங்க மாவருளி ஒருவாறு தான்முதன் முப்பொரு ளாகி யுவந்துநிற்குந் திருவாரு மென்கைத் தவிசிடை மேவுஞ் சிவலிங்கமே.
|
(2) |
|
|
என்னை யறித னினையறி கின்ற வியல்பதென்னா துன்னை யெனைவிட் டறிவான் றொடர்த லொருவனிழல் தன்னை யடியின் மிதிப்பான் றொடருந் தகைமைத்தன்றோ பொன்னை நிகர்செஞ் சடைக்கற்றை யென்கைப் புராந்தகனே.
|
(3) |
|
|
தன்பொரு ளென்ப நினைப்பிறர் தம்பொரு டாவரமாம் என்ப னறிந்து முயிர்க்கே ளிருப்பவு மேதிலர்மெய்ப் புன்புணர் வெஃகு மடமாதி னின்னிற் புறந்திரியும் அன்பறு மென்பவம் போமேயென் னங்கை யமர்ந்தவனே.
|
(4) |
|
|
|
1. சூனியம்-வெறும் பாழ். மன்னி-பொருந்தி. 2. முத்தனு-மூவுடல். மலம்-மும்மலம். 3. என்னையறிதல்-தன்னைத்தான் அறிதல். எனைவிட்டு-என்னை அறிவதை விட்டுவிட்டு. புராந்தகன்-புரங்களையழித்தவன்.4. புன்புணர்வு-இழிந்த சேர்க்கை.
|
|
|
|