முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
15. நிரஞ்சனமாலை
கோலந் தருமடி நாப்பண் விருத்தநற் கோமுகமா
ஞாலங் கருதருங் கோளகந் தம்மி னயந்தடியேன்
சீலங் கொளுமரு ளாசார மாதி திகழ்ந்துநிற்கும்
மூலங் கரணங் கலந்தங்கை மேவிய முக்கண்ணனே.
(12)
மண்ணும் புனலுஞ் சுடுசெழுந் தீயும் வளியுமகல்
விண்ணும் படைத்து விளையாடிக் காக விழியிரண்டு
நண்ணுங் கருமணி யொன்றென வேபவ நாசமுறக்
கண்ணுங் கருத்துங் கலந்துநின் றாயென்கைக் கண்ணுதலே.
(13)
நாக மெனவும்பின் கோக மெனவுமெய்ஞ் ஞானத்தினால்
சோக மெனவுஞ் சொலுமறி யாமை தொலைத்தொருநீ
ஆக முழுது நிறைந்துநின் றாய்நல் லருட்கடலே
பாக மொருபெண் குடியாகு மென்கைப் பரஞ்சுடரே.
(14)
ஒன்றிரண் டாயவை பற்பல வாகி யுதித்தமுறை
சென்றிரண் டாகிப்பின் னொன்றாகி நிற்குஞ் சிவமொடங்கம்
என்றிரண் டாக வுரைப்பார் நினதிய லெய்திலர்காண்
மின்றிரண் டாலன்ன மேனிய னேயென்கை வித்தகனே.
(15)
உறங்குது மென்றுறங் காநிற் பவரிலை யோங்கொளியாய்ப்
பிறங்கு முனையடைந் தோமென் றிருப்பது பேதைமைகாண்
நிறங்குணி போல வெனைக்கொண்டு நின்ற நிலையினின்று
புறம்பக மொன்று மிலாதென்கை மேவும் புராந்தகனே.
(16)
குருவிற் குதவு முடல்சரத் திற்குக் கொடுத்தலுறு
திருவிற் றிகழு நினக்கே தருமனஞ் சேயரிக்கண்
பொருவிற் புருவ மடமாதர் தம்மிடைப் போக்குறுமென்
கருவிற் கொழிவுள தோகர பீடத்தெங் கண்ணுதலே,
(17)

12. நாப்பண்-நடு. 13. பவநாசம்-பிறப்பு அழிந்தொழிய. காகத்தின் இரு கண்கட்கும் கருமணி ஒன்றே என்பர். 14. ஆகம்-உடல். 15. மின்திரண்டால் அன்ன-மின்னல்கள் ஒன்று சேர்ந்தாற் போன்ற. 16. பிறங்கும்-விளங்கும். 17. கருவிற்கு-பிறவிக்காரணப் பொருளுக்கு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்