15. நிரஞ்சனமாலை |
|
|
விள்ளேன் சிறிய ரினம்பெரி யோரை விரும்பியென்றும் நள்ளேன் பிறர்மனைப் போக்கொழி யேன்மெய்ந் நடுநடுங்க உள்ளேன் றிருவடி நீழலி லென்னெஞ் சுருகிநையேன் துள்ளேன் றொழும்புசெ யேனென்செய் கேனென்கைத் தூயவனே. |
(30) |
|
|
அழியும் பொருள்கொடுத் தேசங் கமத்திற் கழிவில்பொருள் பழியும் பவமு மிலாதெய்த லாயும் பயனிலவாய்க் கழியும் படிநெடு நாணீத் தமுதங் கமருகுத்தேற் கொழியும் பவமுள தோகர பீடத் துறைபவனே. |
(31) |
|
|
|
30. விள்ளேன்-விட்டு நீங்கேன் நள்ளேன்-பொருந்தேன். உள்ளேன்-நினையேன். 31.சங்கமம்-அடியார். கமர் உகுத்தேன்-நிலவெடிப் பிற் சிந்தினேன்.
|
|
|
|