1. சோணசைலமாலை |
|
|
துன்னுறு துயரப் பிறவிவெங் கொடுநோய் தொலைப்பினுந் தொலைத்திடா துறினும் நின்னடி மலரை யன்றியான் மறந்து நினைப்பனோ விறக்கும்வா னவரை மன்னளி பருக வுடையிறான் மதுவும் வாரண மதமும்வெள் ளருவி தன்னொடு மிகலி யொழுகுறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(52) |
|
|
நீரினா லழலால் வருங்கொடும் பிணியா னிருதரா லலகையால் விலங்காற் சோரரால் வருந்து மவரலர் நினது தூயநா மம்புகன் றிடுவார் சீருலா மணியா லரிபர வுதலாற் றிசையுற நீள்கையா லெழின்மை சார்தலா லுமையாள் விழிநிகர் சோண சைலனே கைலைநா யகனே.
|
(53) |
|
|
முகவிளக் கென்ன மணிக்குழை மிளிர முலைமுகட் டணிபெற மலராள் பகல்விளக் கென்ன வொளிகெட வரும்பொற் பாவையர்க் கிரங்கிடா தருளாய் அகவிளக் கென்ன வகறிரி நெய்தீ யாக்குவோ ரின்றியே யெழுந்த சகவிளக் கென்ன விளங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(54) |
|
|
நீலியோ டுனைநா டொறுமருச் சித்து நின்றொழில் புரிந்திட வுடற்குக் கூலியோ தனமென் றளிப்பவர்க் கன்றிக் கூற்றினைக் கடக்குமா றெளிதோ மாலியோ சனையின்வணங்குறுங் கைலை மலைநிவே தித்திடக் குவித்த சாலியோ தனமென் றிடத்திகழ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(55) |
|
|
|
52. இகலியொழுகல்-நிறம், வேகம், இடையீடின்மைகளின் மாறுபட்டுப் பெருகல். துன்னுறு-பொருந்திய. இறால்-தேனடை. இகலி-மாறுபட்டு. 53. சீர்உலாம் மணி-கனம் வாய்ந்த அரதன மணியும், பொலிவமைந்த கண்மணியும்; அரி-சிங்கமும், செவ்வரியும்; திசை-திக்கும், நோக்கமும்; எழில்-மை-எழுச்சியுடைய மேகமும், அழகியமையும் ஆம். எழில் எழுச்சியாங்கால். அலகை-பேய். 54. மிளிர பெற கெட வரும் என்க. அகம்-இல்லம். மலராள்-திருமகள். சகவிளக்கு-உலக விளக்கு. 55. நீலி-நீலநிற வடிவத்தையுடைய உமாதேவி. பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையேனும், முத்திசித்திக்கும் வரையும் கடவுள் வழிபாட்டிற்குவேண்டப்படுதலின் அதன் பொருட்டு ஓம்புவார்க் கல்லது போகாதியனுபவத்தின் பொருட்டு ஓம்புவார்க்குக் கூற்றைக்கடத்தலரி தென்பதாம். திருமாலும் நெடுந் தூரத்தினின்று வணங்கும் கைலை தமக்கெதிர்குவித்த அன்னக்குவியல்போன்று விளங்கத் திகழுஞ் சோணசைலரென்க. ஓதனம்-சோறு. சாலி யோதனம்-நெற்சோறு.
|
|
|
|