18. சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு |
|
|
சாற்றுமியோ காங்கஞ் சரண னயிக்கியனாம் போற்றிநீ காணென்று போதித்த தேசிகனோ.
|
(11) |
|
|
அங்க நவவிதமு மந்தநவ லிங்கமொடு தங்கு மெனவெனக்குச் சாற்றும் பெருமானோ.
|
(12) |
|
|
விழுங்கல் பருகலொடு மெல்லலா சாரம் ஒழுங்கிற் குருசிவமு முற்றிடுமிங் கென்றானோ.
|
(13) |
|
|
சோகிய லேகியமுஞ் சொன்ன விவற்றறிவும் ஏகியுறும் பின்மூன் றிலிங்கத்து மென்றானோ.
|
(14) |
|
|
இந்தக்கா யார்ப்பணங்க ளிட்டலிங்கத் தென்றெனக்குச் சந்தப் படவுரைத்துத் தந்தசிவ ஞானியோ.
|
(15) |
|
|
பீடமிடை வட்டம் பெருங்கோ முகநாளம் ஆடலுறு கோளகமா சாராதிக் கென்றானோ.
|
(16) |
|
|
நாற்றஞ் சுவையுருவ நல்லூ றொலிநிறைவு சாற்றுஞ் சடுலிங்கஞ் சாருமெனச் சொன்னானோ.
|
(17) |
|
|
வேர்முதலாங் கந்தம் விளங்கு மரமுதலாங் கூர்மணமா சாரங் குருவினிலா மென்றானோ.
|
(18) |
|
|
தளிராதி கந்தமுகை தான்முதலாங் கந்தம் ஒளிரார் சிவசரத்தி னாற்றிடுமிங் கென்றானோ.
|
(19) |
|
|
காய்முதலாங் கந்தமெலாங் காசில்பிர சாதத்துந் தூய்மலிமா லிங்கத்துந் துன்னுமெனச் சொன்னானோ.
|
(20) |
|
|
மதுரந் துவர்கார்ப்பு வண்புளிகைப் பெல்லாஞ் சதுரென் றிருத்தியவா சாராதிக் கென்றானோ.
|
(21) |
|
|
பொன்மைவெண்மை பச்சைசெம்மை போந்த கருமையெலாம் நன்மையவா சாராதி நண்ணுமென்ற நாயகனோ.
|
(22) |
|
|
|
15. காயார்ப்பணம்-உடலை அர்ப்பித்தல். 17. நாற்றம்-மணம். ஊறு-பரிசம்.19. 20. தூய்மலி-தூய்மை மிகுந்த. துன்னும்-பொருந்தும்.
|
|
|
|