முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
18. சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு
வன்மைமென்மை வெம்மைதண்மை வாய்ந்த மிசிரமெலாஞ்
சின்மையவா சாராதி சேர்ந்துகொளு மென்றானோ.
(23)
கஞ்ச நரம்புதோல் கண்டகுழ லாதியொலி
அஞ்சொலிவை யெல்லாமவ் வாறுமுறு மென்றானோ.
(24)
மணமுதலா மைந்து வகைநிறைவெ லாமும்
நணுமுறையா சாராதி நாடிலெனச் சொன்னானோ.
(25)
இம்முறையா றாறா மிலங்குகர ணார்ப்பிதமென்
றெம்மறிவு கொள்ள வியம்புசிவ ஞானியோ.
(26)
தொட்டறிந்திங் கொன்றைத் துணிந்து நுகர்ந்துமகிழ்ந்
திட்டமைந்து நிற்கு மிலிங்கங்க ளென்றானோ.
(27)
கூறுமிவை யாவினுமிக் கொள்கை பெறுமிலிங்கம்
ஏறு மிரட்டுநூற் றெட்டாகு மென்றானோ.
(28)
உருவஞ் சுவைநிறைவா யோங்கர்ப் பிதங்கள்
மருவுந் திறஞ்சொன் மயிலை மலைவிளக்கோ.
(29)
சுத்தசித்த மோடுபிர தித்தமெனத் தோன்றுபுபா
சத்தமுத்த மாக்குபிர சாதமரு ணாயகனோ.
(30)
அங்கலிங்க சத்திபத்தி யத்தமுக வர்ப்பிதசே
டங்களிவை யட்ட சயிலமெனச் சொன்னானோ.
(31)
குசித்த மழிந்து குடும்பநோய் மாற்றுஞ்
சுசித்தமதி லாசாரந் தோன்றுமெனச் சொன்னானோ.
(32)
குபுத்தி யழிந்து குருநெறியி னிற்குஞ்
சுபுத்திதனி னிற்குஞ் சுடர்குருவிங் கென்றானோ.
(33)
ஆங்கார மில்லா நிராங்கார வத்தமதில்
நீங்கா திலகு நிகழ்த்துசிவ மென்றானோ.
(34)

23. மிசிரம்- கலப்பு. 28. இரட்டும் நூற்றெட்டு-இருநூற்றுப் பதினாறு. 29. மயிலைமலை-மயிலம். 32. குசித்தம்-நல்லதல்லாத மனம். சுசித்தம்-நல்லமனம். 33. குபுத்தி-தீயஅறிவு. சுபுத்தி-நல்லறிவு. 34. ஆங்காரம்-அகங்காரம்: நான் என்னும் ஆணவம். நிராங்காரம்-அகங்காரமற்ற தன்மை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்