18. சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு |
|
|
அறியா தொருநா ளறையினும்வன் பாசஞ் செறியா தருளுந் திருப்பே ருடையானோ.
|
(71) |
|
|
பூதமுத லெல்லாமும் போக்கியவற் றுண்மறைந்து ஞாதிருவா மென்னை நயந்தறிவித் திட்டானோ.
|
(72) |
|
|
எந்தைசிவ சாதனங்கட் கெல்லாந் திருநீறு முந்தியதென் றுண்மை மொழியும் பெருமானோ.
|
(73) |
|
|
உருத்திரனே யையமிலை யோருருத்தி ராக்கந் தரித்தவ னென்றெமக்குச் சாற்றும் பெருமானோ.
|
(74) |
|
|
ஒண்மறையின் கண்ணா முருத்திரமவ் வஞ்செழுத்துங் கண்மணியென் றையமறக் காட்டு மருட்கடலோ.
|
(75) |
|
|
அருவாகி நின்றசச்சி தானந்த வீசன் குருவாகித் தன்னைக் கொடுக்குமெனச் சொன்னானோ.
|
(76) |
|
|
பரம சிவமெனவும் பண்டைமறை போற்றும் பிரமமென வும்பேர் பெறுமிலிங்க மென்றானோ.
|
(77) |
|
|
திரஞ்சரமென் றீசன் றிருவுருவி ரண்டுள் பரஞ்சரமென் றோதும் பவளவா யண்ணலோ.
|
(78) |
|
|
அங்கம் புனைவோ னடிப்புனலல் லாதுபவப் பங்கங் கழுவப் படாதென்று சொன்னானோ.
|
(79) |
|
|
அந்தக் கரணத் தழுக்கறுப்ப தெங்கள்பரன் சந்தப் பிரசாதந் தானென்று சொன்னானோ.
|
(80) |
|
|
|
71. அறியாது-பலனூண்டாகுமென்று உணராமல். செறியாது-பொருந்தாமல். 72. நயந்து-விரும்பி. அறிவித்திட்டானோ-உண்மைப் பொருளை உணரச் செய்தவனோ? 73. எந்தை-எம் தந்தையாகிய சிவபிரானுடைய. முந்தியது-முதன்மையானது. 74. ஓர் உருத்திராக்கம்-ஒரு சிவமணி. 75. ஒண்மறை-பெருமை பொருந்திய மறை. 76. அருவாகி-வடிவமற்றதாகி. தன்னைக் கொடுக்கும்-மெய்யறிவைத் தரும். 77. பரமசிவம் பிரமம் எல்லாம் ஒன்றென்றபடி. 78. திரம்-நிலைபேறு. சரம்-போக்குவரவு. 79. அடிப்புனல்-திருவடிநீர். பவப்பங்கம்-பிறவியாகிய அழுக்கு. 80. அந்தக்கரணம்-மனம் புத்தி சித்தம் அகங்காரம்.
|
|
|
|