18. சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு |
|
|
தருணமதிற் சீறுந் தனிவிழிகாட் டாமல் கருணை குடியிருக்குங் கண்களொடு வந்தானோ.
|
(81) |
|
|
ஏரூருந் தான்வா ழிடமேநற் காசியுந்தென் ஆரூரு மம்பலமு மாக்குசிவ ஞானியோ.
|
(82) |
|
|
தன்பாத தாமரைதோய் தண்புனலே கங்கையாய் வன்பாச நீக்க வழங்குசிவ ஞானியோ.
|
(83) |
|
|
மண்படைத்த நான்முகனார் மானுடர்த மொண்முகத்தில் கண்படைத்த பேறுபெறக் காட்டு முருவானோ.
|
(84) |
|
|
ஆர்க்குங் கொடுநோ யனைத்துங் கடைக்கண்ணால் தீர்க்குங் கருணைச் சிவஞான தேசிகனோ.
|
(85) |
|
|
செப்ப முறவெனது சிந்தைவீட் டாசையெனுங் குப்பை துகைத்துக் குடியிருக்க வல்லானோ.
|
(86) |
|
|
தன்னையரு ளாளனெனுந் தன்மை யுலகறிய என்னையடி யாரோ டெழுந்தருளிக் காத்தானோ.
|
(87) |
|
|
மெய்த்த வறிவாம் விளக்குகதை யொன்றெடுத்துத் தத்துவமா மட்கலத்தைத் தாக்கும் பெருமானோ.
|
(88) |
|
|
வழுவின்றித் தன்மா வலியுலக மேத்த மழுவின்றிப் பாவ மரமெறிய வந்தானோ.
|
(89) |
|
|
இணையாது மில்லா விடர்ப்பவவே லைக்குப் புணையாக வந்தருளும் புண்டரிகத் தாளானோ.
|
(90) |
|
|
|
81. தருணம்-சமயம். 82. ஏர் ஊரும்-சிறப்புப் பொருந்தியிருக்கும். தென்ஆரூர்-அழகிய திருவாரூர்; தெற்குத் திக்கில் உள்ள திருவாரூருமாம். அம்பலம்-தில்லைமூதூர். 83. வன்பாசம்-வலியபந்தம். 84. கண் பெற்றதன்பலன் அடிகளாரைப்போற்றி வழிபடல் என்க. மண்-உலகம். 85. ஆர்க்கும்-பிணித்து வருத்தும். 86. ஆசையெனுங் குப்பை-அவாவென்னுங் குப்பை. துகைத்து-அழித்து. 87. அருளாளன்-திருவருளை ஆட்சிசெய்து அடியவர்கட்கு நன்மை விளைவிப்பவன். 88. மெய்த்த-உண்மைத் தன்மை பொருந்திய. கதை-கதாயுதமென்னும் ஒரு படைக்கலம். 89. மழு-கோடரி. பாவமரம்-தீவினையாகிய மரம். 90. இடர்-துன்பம். பவவேலை-பிறவிக்கடல். புணை-தெப்பம். புண்டரிகம்-தாமரை
|
|
|
|