19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது |
|
|
[தூது என்பது தமிழ் மொழியில் உள்ள தொண்ணூற்றாறு வகை நூல்களில் ஒன்றாம். ஒருவர் தம்முடைய எண்ணத்தைத் தம்முடைய பகைவர், நண்பர், காதலர் முதலானவர்களில் யாரேனும் ஒருவருக்கு மற்றொருவர் வாயிலாகத் தூது விடுவதாகும். அன்னம், மயில், கிளி, முகில், நாகணவாய்ப் பறவை, தோழி, குயில், நெஞ்சு, தென்றல், வண்டு என்பன தூது விடுதற்குரியனவாகத் தமிழ் நூல்களிலே கூறப்பட்டுள்ளன. ஆனால் இந்நாளில் இவ்வெல்லையுங் கடந்து பணவிடு தூது, நெல்விது தூது, துகில்விடு தூது, துகில்விடு தூது, புகையிலை விடுதூது, மான்விடு தூது, காக்கைவிடு தூது முதலிய பலதூதுகள் தோன்றியுள்ளன. இத்தூது அடிகளார் சிவஞான பாலைய சுவாமிகள் என்னும் பெரியாரிடம் நெஞ்சத்தைத் தூதாக அனுப்பியதாகப் பாடியதாகும். |
|
|
|
காப்பு
நேரிசைவெண்பா |
|
|
கைக்களிற்றை யன்றுரித்த கண்ணுதலோ னீன்றதனி மெய்க்களிற்றை நெஞ்சமே மேல்கொண்டு புக்குருக்கி மேவன்பாற் றூதாகு மேனிச் சிவஞான தேவன்பாற் றூதாகச் செல் |
|
|
|
நீர்கொண்டு தாளாலந் நீரைத்தீஞ் சாறென்று பேர்கொண்டு வந்தாரப் பெய்கரும்பின் - ஏர்கொண்ட பூமுடியா னீர்கொண்டு பொங்கு மருளென்று நாமுடியால் வீழ்ந்திறைஞ்ச நல்குதரு - காமருதன் தேசுணர்த்த வேண்டித்திரு மடிமேன் மேவிவாழ் மாசுணத்தைத் தானொளித்த மாணிக்கம் - நேசித்துக் கொள்ளு மடியார் குழாத்தினைத் தான் வஞ்சித்திங கொள்ளும் விடங்கலவா விண்ணமுதந் - துள்ளும் 5 ஒருமான் மழுவோ டொளித்தெமைமுன் பற்றும்
|
|
|
|
|
(காப்பு) மேல் கொண்டு-மேன்மையாகப் புகழ்ந்து போற்றிக் கொண்டு. புக்குருக்கி-புகுந்துருக்கி. 1.0-5.
|
|
|
|
|