| 19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது |
|
| |
வறப்பினு நல்கும் வளத்தாய்ச் - சிறப்ப அணியார் கொடையாகு மைந்தருநற் சிந்தா மணியார் கருணை மலையாள் - கணியா அறிவாங் குறிஞ்சியினின் றாங்கெழுந்து காமச் செறிவாங் கொடும்பாலை தீர்த்து மறியாத மாயையெனு முல்லை வளர்பசுக்கொண் டைவரெனும் ஆய ருறுதொழிலை யாங்ககற்றிப் - பாய விடய மெனுங்குளங்கள் வேறுவே றாகா துடைய வுடைத்திட் டுளமென் - றடையு 30. மருத நிலநிறைந்து வாள்விழியா நெய்தல்
|
|
| |
| |
பெரிதுபெற வந்து பெருகிக் - கருதிலொரு தானந்த லின்றித் தலம்விசும்பு போர்த்துவரும் ஆனந்த மென்னுமலி யாற்றினான் - ஞானம் பயனாக வோர்முப் பகுதியுயிர் வாழும் நயனாகு மும்மாயை நாடன் - வியனாக விள்ளல மன்பர் விடயக் கரவருறா உள்ளமெனு நன்கமைந்த வூருடையான் - தெள்ளுதமிழ்ச் சொல்லா மலரைச் சுவையா மதுவொழுகப் புல்லா வழுச்சொலெனும் புன்மையெலாம் - இல்லாமல் 35. புன்புலவ ராங்குரங்கு போற்றாப் பெருமையுற
|
|
| |
| |
இன்புலவ ராஞ்சு ரும்பார்த் தீண்டிவர - அன்பெனுமோர் வீடாத நார்கொண்டு மென்னா வெனுங்கரத்தால் வாடா வகைபுனைபா மாலையான் - பீடார் மலரா லயனார் மனச்சாலை நின்று நலநா மணிவாய்த னண்ணி - நிலகை வானிடையே யோடி வரையா வழகுடைத்தாய்த் தானனுமா னிப்பினுயர் தன்மைததாய் - ஞான நிறையா மரபு நிலைவழா தோங்கும் மறையா மரியபரி மாவான் - குறையாத 40. தத்துவமாஞ் சேனை தனைத்துரந் திட்டாணவமாய்
|
|
| |
|
| |
26.25-30 வறப்பினும்-வறண்டாலும். வளத்தாய்-வள கையுடையதாய். ஐந்தரு-கற்பகதரு முதலியன. 31.30-35 தான் நந்தலின்றி-தான் கெடுதலில்லாமல். விடயக்கரவர்-சிற்றின்பப் பற்றுள்ள வஞ்சகர். புல்லா-பொருந்தாத. 36.35-40. வீடாத-கெடாத. மலராஅயனார்-நான்முகன். மரபுநிலை வழாது-மரபுநிலை தவறாமல். பரிமாவான்-தாங்குங் குதிரையை உடையான்.
|
|
|
|