| 19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது |
|
| |
வழங்கு மருளுடையான் வந்தான் - விழுந்து பரவு மடியார் பவப்பிணிக்குத் தானே மருவு மருந்தனையான் வந்தான் - பொருவில் மணிகண்ட னென்னுமொழி மாற்றியே யக்க மணிகண்ட னென்னுமவன் வந்தான் - கணிகண் டெயினர் மணமயர்வுற் றின்ப மருவும் மயிலை மலையுடையான் வந்தான் - துயர்செய் பொறிக்குஞ் சரமதனைப் போகாமற் றாளின் மறிக்குஞ் சிவஞானி வந்தான் - எறிக்கும் 80. தினகரனா லாரழலாற் றிங்களாற் போகா
|
|
| |
| |
மனவிருளை நீக்குவான் வந்தான் - எனமுன் பரிச்சின்ன ஞானம் பரியநார் காதில் திருச்சின்ன வாரமுதந் தேக்க - விரித்துக் கவிராயர் போற்றக் கவரிபல முத்திப் புவிராய ரென்றி ட்டிப் போதத் - தவிராமல் ஞாலவட்டந் தாங்குமொரு நாகத்தின் குட்டியென ஆலவட்டம் பாங்கு ரசைந்துவரச் - சாலவட்ட மாமதியாய் நன்கு வளர்ந்து துறந்தபிறை காமருதன் வாழிடத்தைக் காண்பதற்குச் - சேர்முறைபோல் 85. வெள்ளை மணிக்கவிகை மேனிழற்ற வான்மழைபோல்
|
|
| |
| |
கொள்ளைமல ரன்பர் குழாம்பொழியக் - கிள்ளை மொழியார் மயறூந்து முத்திபதத் தென்றும் அழியாத வின்ப மருள்வாய் - பழியா நடையா யுலகிறந்த ஞானோ தயாவெம் உடையாய் புலன்கொ லுணர்வாம் - படையாய் அணியே யமுதமே யாவியே சிந்தா மணியே கருணை மலையே - பணியேறு கோலங் கரந்துவந்த கோதிலாத் தேறலே ஞாலம் புகுஞான ஞாயிறே - சீலங்கொள் 90. காவேயென் செல்வமே கண்ணே சிவஞானத்
|
|
| |
|
| |
76.75-80. பொருவுஇல்-ஒப்புல்லாத. மணிகண்டன்-நீலமணி போன்ற கரிய கழுத்தையுடையவன். அக்க மணிகண்டன்-சிவ கண்மணியைக் கழுத்தில் அணிந்தவன். எயினர்-வேடர். மணமயர்வுற்று-மணஞ்செய்து. பொறிக்குஞ்சரம்-புலன்களாகிய யானைகள். மறிக்கும்-தடுக்கும். எறிக்கும்-கதிரைவீசூம். 81.80-85. தினகரன்-கதிரவன் ஆரழல்-மிகுந்த தீ மனவிருள்-அஞ்ஞானம். திருச்சின்னம்-அடையள ஒலிக் கருவிகள். முத்தி-வீடுபேறு. புவிராயர்-உலக அரசர்கள். ஞாலவட்டம்-உலகவட்டம். வட்டமாமதி-வட்ட வடிவம் பொருந்திய முழுத் திங்கள்.86.85-90. கவிகை-குடை. கொள்ளைமலர்-மிகுதியான மலர். மபன் துரந்து-காம மயக்கத்தைப் போக்கி. பழியா-பழிக்கப்படாத. பணியேறு-பாம்புகளணியப்பெற்ற கோலம்-வடிவம். கரந்துவந்த-மறைத்து வந்த. தேறல்-தேன்.
|
|
|
|