| 19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது |
|
| |
தேவே யெனவந் தியர்துதிப்பப் - பூவேறு கோனும் புரந்தரனுங் கொண்ட னிறத்தானும் வானும் புகழ்பவனி வந்தருள - ஞானம் பருவ வகையாற் பலபேதப் பட்டார் தெருவின் மனமகிழ்ந்து சென்றார் - உருவிள் ஒருதா னணிய வுரியனவா மென்னும் பெரிதா மழுவும் பிறவுந் - தெரியாமல் நீத்துப் பொதுவாகு நீறுதிரு மேனிகொடு சாத்திப் பெருமைபெறுஞ் சங்கரனை - மூத்துத் 95. திருந்து நதிமுழுதுஞ் சென்றாடி னாலும்
|
|
| |
| |
அருந்து முணவுசரு காக்கி வருந்துறினும் நீங்காத மும்மலமு நீக்கவருண் மேனிகொடு நாங்காண வந்தருளு நாயகனை - ஓங்கார நாத முறுபொருளாய் நாதாந்த நாடகனாய் வேத முடிமணியாம் வித்தகனைச் - சாத மருணா சகனை மயிலைமலைத் தேனைக் கருணா லயனை யெதிர் கண்டார் - சரணார விந்தந் தொழுவார் விழுவா ரிதுநமக்கு முந்து தவத்தின் முதிர்வென்பார் - உந்தன்பின் 100. உள்ளந்தா ணின்றுச்சி காறுமுள மாயுருகி
|
|
| |
| |
வெள்ளமபாய் கண்ணராய் மெய்விதிர்ப்பார் - கொள்ளுங் கலமென் றுகிலுதவிக் காவென்பா ரேனைப் பலவும் பெறுமோர் பரிவிங் - கிலமடியேம் எம்மை யெமக்கருளா யென்பா ரிறைவனே இம்மை நினையணையோ மென்றாலும் - அம்மையினில் யானென்று நீயென றிரண்டில்லை யென்னுமுறை தானின் றனையணைவோஞ் சார்ந்தென்பார் - ஊனின்று வாழ்ந்த தமையுமினி மாய்ந்தாலு நன்றென்பார் வீழ்ந்துமொழி யொன்றுபெற வேண்டுவார் - சூழ்ந்த 105. திசையெலா நின்மெய்த் திகழ்வென்பா ரென்சொற்
|
|
| |
|
| |
91.90-95. கா-பொழில். வந்தயா புகழ்பாடுவோர். பூவேறுகோன்-நான்முகன். புரந்தரன்-இந்திரன். கொண்டல் நிறத்தான்-திருமால். வானும்-தேவர்களும். 96.95-100 திருந்துநதி-புனிதயாறுகள் சாதமருள்-பிறவிக்குக் காரணமான வடரீதவுணர்வு உந்து அன்பின்-மேற்செலுத்துகிற அன்பினாலே. உள்ளந்தாள்-காலன் அடிப்பாகம். உச்சி-தலை. 101.100-105. அம்மை-மறுபிறப்பு. மெய் விதிர்ப்பார்-உடல் நடுங்கு. வார்கள்.
|
|
|
|