முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது
           அயர்த்த மலர்வா யழகும் - வியப்புறவவ்
           வாலமுண்ட தென்ப தறையாம லிவ்வுலகம்
           பாலருந்து மென்னப் படுமிடறும் - மேலுவந்து
           நாமங்கை போற்றவுள நாணுந் தலைமாலை
           போமங் கலமாம் புயமலையுஞ் - சேமங்கொள்
           ஏனமருப் பில்லா திருப்பதுவு மோரழகென்
           றூன மறத்திகழு மொண்மார்பும் - வானம்
           வழுத்தம் புயமா மனையான் றலைக்குக்
           கழுத்தென்ப தில்லாக் கரமும் - எழுத்தென்று
125.       கொள்ளுங் கொடுவரித்தோல் கொள்ளாது நூல்வலியைக்
           கொள்ளுந் துகிலுடுத்துக் கொண்மருங்கும் - உள்ளுமும்பர்
           மன்னு முடிவெருவி வந்துழியிம் மன்பதைதஞ்
           சென்னி படச்சிவக்குஞ் சித்தடியும் - என்னுடைய
           கண்களிப்பக் கண்டுமிகக் காதலா னேனிந்த
           மண்களிக்க வந்தசுவை வானமுதம் - பெண்களுக்கு
           மாலா ரணனமரர் மாதவரிம் மானுடர்போல்
           தோலாத வீர முடைத் தோற்றத்தான் - மேலாய
           செங்கையமு தன்னான் சிவஞான தேசிகனெம்
           பங்கமல மாயைப் பகையானான் - தங்கணல
130.       ஊண்துறந்து சீர்சா லுடைதுறந்து செம்மணிப்பொன்
           பூண்துறந்து கண்கள் புனல்சொரிய - ஆண்டடைந்து
           நையு மவாநிற்க நாயேன்பாற் பொங்குமருள்
           செய்து திருக்டைக்கண் சேர்த்தினான் - ஐயனைநான்
           அன்று தொடங்கி யணைவான் விருப்புற்றேன்
           என்றுணைநீ யன்றி யிலைநெஞ்சே - நன்றிபுரி
           வேதா கமங்கள் விதிக்கும் விதியனைத்தும்
           நீதான் புனிதமுற நேர்ந்தன்றோ - ஆதார
           யோக மிருநான்கு முன்னைவய மாக்குவதற்
           காக முயலுவன வல்லவோ - போகமுறு
135.        தன்மைக்குஞ் செய்யுந் தவத்திற்குங் கற்றறியும்

121.120-125. ஏன மருப்பு-பன்றிக் கொம்பு. வழுத்து-போற்றுகிற. 126.125-130. கொடுவரித்தோல்-புலித்தோல். மருங்கு-பக்கம். மால்-திருமால். ஆசணன்-நான்முகன். அமரர்-தேவர். பங்கம்-பழுதுடைய. 131.130-135. புனல்-நீர். பூண்-அணிகலம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்