| 19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது |
|
| |
சாலை யிடத்தைமுனந் தந்ததூஉம் - மாலயற்கும் எட்டாற்கு வேண்டி யிருங்கலயர் குங்குலியம் முட்டாமற் கொள்ள முயன்றதூஉம் - வட்டாடி ஆக்கு பொருளை யரனடியார்க் கன்பினால் மூர்க்க ருதவி முடித்ததூஉந் - தூக்குதலை மீது பரனொளித்த வெண்கோ வணத்திற்காப் போதவமர் நீதியார் புக்கதூஉம் - ஆதியுமை பாக னடியவரைப் பண்டைநிலை யுன்னியதம் தோகைகரங் கம்பர் துணித்ததூஉம் - சோகமறக் 160. கண்ணப்பர் மென்றசையைக் காளத்தி யார்தம்மை
|
|
| |
| |
உண்ணப்ப வென்றுமுன மூட்டியதூஉம் - வண்ணப்பொன் மீனை யளக்கரிடை மிக்க வதிபத்தர் மேனைமரு கற்கென்று விட்டதூஉம் - யானைமிசை வந்தமலை நாட்டரசர் வண்ணானைத் தொண்டரெனப் பந்தமறு மன்பாற் பணிந்ததூஉம் - கந்தைபரற் கன்பி னுதவிலனென் றக்குறிப்புத் தொண்டர்தாம் முன்புசிலை யோடுதலை மோதியதூஉம் - அன்புறுமோர் தாட்புலியார் போற்றுதிருத் தாண்டவனெற் கொள்கிளையைக் கோட்புலியார் நேசமறக் கொன்றதூஉம்-கேட்பிலிவை 165. எல்லாமு நின்ற னிசைவாற் புரிந்தனநீ
|
|
| |
| |
அல்லா தியற்றலற மன்றுகாண் - சொல்லாட நின்பெருமை யாரறிவார் நீயென் னொடுகூடில் என்பெருமை சொல்வாரு மில்லைகாண் - வன்புவியில் நின்னைத் துணையல்லை நீயென்று நீங்கினால் பிள்ளைத் துணையாகும் பேரில்லை - உன்னைத் துணையாக் கொளற்குத் துணைநீ நினக்கிங் கிணையாய்ப் பிறிதொன் றிலைகாண் - புணையாய்ப் பிறப்புக் கடற்குப் பிடிக்கப் படுவாய் மறப்புற் றதினழுத்த வல்லாய் - சிறப்பு 170. விலங்கி னரர்தமக்கு மேவியது நின்னால்
|
|
| |
|
| |
156.165-160. பாணர்-யாழ்ப்பாணர். முட்டாமல்-தட்டுப்படாமல். வட்டாடி-சூதாடி. தூக்குதுலை-தொங்கவிடப்பட்ட நிறைகோல். பண்டைநிலை-பழைய இல்லற நிலை. கம்பர்-கலிக்கம்ப நாயனார். தோகை-மயிலைப் போன்ற மனைவி. 161.160-165. அளக்கர்-கடல். மேனைமருகன்-இமாசல மன்னன் மனைவியாகிய மேனைக்கு மருமகன். மலைநாட்டரசர்-சேரமான் பெருமாள். கந்தை-கிழிந்த ஆடை. பரற்கு-சிவபிரானுக்கு. ஓர்-ஒப்பற்ற. தாட்புலியார்-புலிக்கால் முனிவர். தாண்டவன்-கூத்தப்பிரான். கிளை-சுற்றம். 166.165-170. இசைவு-உடன் பாடு. புணை-தெப்பம்.
|
|
|
|