| 19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது |
|
| |
திக்கெலா மேத்தமலி சேயூரும் - முக்கணனார் மந்திர மொன்றா யிரமாய் வளர்ந்துபயன் தந்திடு மொண்மயிலைத் தண்மலையும் - பந்தமறு தன்னை மருவினரைத் தானாக்குந் தன்மையுடை மன்னுசிவ ஞானி மருவிவாழ் - நன்னிலையால் அம்ம பிரமபுர மாகும் பொருள்படவே பொம்மபுர மென்னும் புகழ்ப்பதியும் - எம்மிறைவன் வீற்றிருந்து வாழிடங்கண் மேவியிவற் றொன்றினுறும் தேற்ற முணர்ந்துநீ செல்லுங்கால் - ஆற்றலுடன் 205. இல்லை யிறைவனாற் பூதமலா லிங்கென்று
|
|
| |
| |
சொல்லி யுனைமறித்துச் சூழ்ந்துதான் - நல்ல அலகா யுதமெறித லாயுரைப்ப னந்த உலகா யதனுரைகேட் டோடேல் - பலகாலும் நாணேது மின்றிக் கருமமலா னானிறையைக் காணே னெனுங்கரும காண்டியொடு - பூணேல் நினையணு வாக்கு நியாய னுரையைத் தினையள வாயினுநீ தேறேல் - பினைவருவை சேடியனை நெஞ்சமே சேரவவன் றம்பியென நாடி யொருசிறிதும் நண்ணுறேல் கூடியொரு 210. புத்திகண பங்கமெனப் புத்திகெட்ட புத்தனுரை
|
|
| |
| |
மெய்த்ததென நின்று விடாதிநீ - முத்திபெறு தன்னை யணுவாக்கித் தாழ்பஞ்ச ராத்திரிதான் என்ன சொலினு மிசைந்துறேல் - நின்னைக் கெடுப்பதே யெண்ணிக் கெடும்யோ கிகளை விடுப்பதே நன்றென்று மேவேல் - அடுப்பதெனாக் கள்ளைக் குடித்துக் களிக்கின்ற வாமிமொழி கொள்ளத் தகுவதெனக் கொண்டுறேல் - மெள்ளப் பகுதி விகுதி பகுத்தறியின் முத்தி தகுதியெனுஞ் சாங்கியனைச் சாரேல் - மிகுதிபெறும் 215. நஞ்சமார் கண்டனொடு நாரணனை யொப்பாக்கும்
|
|
| |
|
| |
201.200-205. எலாநாளும்-எல்லா நாளும். சேயூரும்-காளையை நடத்தும். தானாக்குதல் - பொய்யறிவை யொழித்து மெய்யறிவைக் கொடுத்தல். 206.205-210. முதலிய அடிகளால் சமயவாதிகள் செய்தி உரைக்கப்படுகிறது. 211.210-215. மெய்த்தது-உண்மையானது. இசைந்துறேல்-ஒத்துக்கொள்ளாதே.
|
|
|
|