முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
துங்கவெம் புகர்முகக் களிநல்யா னையினதட்
       சுமையும் பெரும்புலிதருந்
துகிற்சுமையும் வெண்மருப் புச்சுமையு மிளையாது
       துள்ளியெழு சிறுகன்றுமான்
வெங்கனன் மழுச்சுமையும் வெண்முளரி மலர்வென்ற
       வெண்டலைச் சுமையுமணிகள்
வெயிலெறித் திருள்விழுங் கோரா யிரம்படம்
       விரிக்குமர வச்சுமையும்நீள்
அங்கம் புரண்டுவல மாலயம் புரியுமவ
       ரணியெனத் திரைகள்புரளு
மாயிரந் திருமுகக் கங்கையஞ் சுமையுமொழு
       கமுதகிர ணக்குழவிவெண்
திங்களஞ் சுமையினொடு போகட் டுலாவுமிறை
       செங்கீரை யாடியருளே
திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ
       செங்கீரை யாடியருளே.
(1)

1. துங்கம்-உயர்ச்சி. புகர் முகம்-புள்ளிகளையுடைய முகம். அதட்சுமை-தோற்சுமை. புலிதரும் துகில்-புலித்தோல். அரவச்சுமை-பாம்புச் சுமை. அங்கம் புரண்டு-உடலாற் புரளுதலைச் செய்து. அணி-வரிசை. திரைகள்-அலைகள். போகட்டு-போட்டுவிட்டு. திமிரமலம்-மலவிருள்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்