| 21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ் |
|
| |
வென்றிவிடை யினர்திருக் காமநா யகர்திரு விழாமுற்ற வருண்மாதவர் வேறுவே றாயதிரு வேடத்தர் நீறுதிமிர் மேனியினர் வேணிமுடியர் துன்றிழை மலிந்தகந் தைச்சுவலர் பட்டுமென் றூசுமணி யாரமணிவார் சூலப் படைக்கலத் தினர்தனித் தவரருகு தோகையர்க ளோடுவருவார் குன்றுறழ் பனைக்கைவெங் கரிசிவிகை யாதிமிசை கொள்பவ ரியந்தழங்கக் கோடிநூ றாயிரவர் மகரா லயத்தொடிகல் கொண்டதோர் செயல தென்னச் சென்றெதிர் முழங்குபொம் மையபட் டினச்செல்வ செங்கீரை யாடியருளே திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ செங்கீரை யாடியருளே.
|
(2) |
| |
| |
ஒருவாறு மின்றியிது வென்றுணர வரியபர மொன்றிரண் டாகியவைமூ வுருவாகி மூவிரண் டாறாறு வகையிரட் டுற்றநூற் றெட்டுவிரிவாய் இருவாறு நின்றிலகி யிருநூறு தலையிட்ட வீரெட்டு மாறாறினவ் வெண்பெற்ற வாறினவ் வாறுமூன் றினிலவை யிரண்டினி லிரண்டுமொன்றில் மருவா வடங்கிநீ நானென்னு மயலின்றி மனவா சகங்கடந்து வந்துகூ டுதலகற லின்றிநின் றிடுநிலையை மலரடி முடிக்களித்துத் திருவாய் மலர்ந்தெனக் கொருமொழியி லருள்பவா செங்கீரை யாடியருளே திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ செங்கீரை யாடியருளே.
|
(3) |
| |
|
| |
2. நீறுதிமிர்-திருநீற்றை மிகுதியாக அணிந்துள்ள. இயந்தழங்க-வாத்தியங்கள் ஒலிக்க. மகராலயம்-கடல். 3. இருவாறு-இரண்டுவகை. அகறல்-நீங்குதல்.
|
|
|
|