| 21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ் |
|
| |
பாவகப் படுபெரும் புகழிமய மலைபெறு பவானிவளர் திருமுலைத்தண் பாலுண்டு தண்டையந் தாள்சிவந் திடவாதி பகவன்வியன் மார்பினுலவிப் பூவகப் பள்ளியமர் தருபுங் கவன்றலை புண்படக் குட்டிநீடு பொன்னங் குவட்டுமா யிருஞால முடிவைத்த புழையெயிற் றரவசைத்து மாவலர்ச் செங்கைகொடு சிறுதே ருருட்டியுயர் வானவர்க் கிடர்விளைத்து வலிகொண் டிருந்தவன் றிறலசுரர் தலைவெட்டி வட்டாடு மொருவெற்றிவேல் சேவகப் பிள்ளைதுணை யாகவிளை யாடுவாய் செங்கீரை யாடியருளே திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ செங்கீரை யாடியருளே.
|
(4) |
| |
| |
பெருமுடக் கானிமிர்ந் ததுகூ னிமிர்ந்தது பிணிகள்பல பலபோயின பிடித்திருந் தெவரானு மகலாது துயர்செய்த பேயகன் றிட்டதம்மா அருமகப் பெற்றுவந் தனமிடி யகன்றன மகிலம் புரக்கவருமோ ரரசெய்தி னஞ்சென்று வென்றெய்து தற்குமிக வரியபகை வென்றெய்தினம் வருமடக் கொடிமாதர் கண்வலைப் பட்டதுயர் மாற்றவற நெறிகண்டனம் மலமாயை கருமங்க ணிலைகண்டி லோமென்னு மக்களொலி விண்ணளப்பத் திருமடத் தரசிருந் தருள்செயருள் விழியாள செங்கீரை யாடியருளே திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ செங்கீரை யாடியருளே.
|
(5) |
| |
|
| |
4. பாவகப்படும்-பாட்டின் பொருளாய்ப்படும். பவானி-இறைவி. வியன் மார்பு-அகன்ற மார்பு. பூவகப்பள்ளியமர் தருபுங்கவன்-நான்முகன். பொன்னங்குவடு-மேருமலை. அரவசைத்து-ஆதிசேடனாகிய பாம்பை அசையச் செய்து. தளலைவெட்டி வட்டாடும் வேல்-என்றது அசுரர் தலைகளை வட்டாடு காய்கள்போல் உருண்டோட வெட்டும் வேலென்றவாறு. 5. முடக்கால்-வளைந்த கால். மலமாயைகருமங்கள் நிலை கண்டிலோம்-மாயையை நீக்கி வீடுபேற்றினை யடைதற்குரிய செயல் வழிகளைக் கண்டோம் இல்லை.
|
|
|
|