| 21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ் |
|
| |
மெய்தயங் கரிசனம் பூசிவெந் நீராட்டி விழியூதி மெய்துடைத்து விரனிலந் தைவந் திடும்பொட்டின் மீதுலையின் வெண்ணீ றணிந்துவிழியில் மைதயங் குறவெழுதி யியல்பாகு மக்கமணி வடமணிந் தம்பொனரைஞாண் மணியரிக் கிண்கிணி சதங்கைபொற் றண்டைகள் வனைந்துபொற் றொட்டிலுய்த்தே எய்தவந் துறுபெருஞ் செல்வமே யமையாத வின்சுவைத் தெள்ளமுதமே யென்னுயிர்த் துணையாய மாணிக்க மதலையே யென்றுசீ ராட்டியன்பால் செய்தவம் பெருகுமம் மவைவளர்க் குங்குழவி செங்கீரை யாடியருளே திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ செங்கீரை யாடியருளே.
|
(6) |
| |
| வேறு |
| |
| |
முந்துதவு வார்களிடை யொன்றார்வங் கூர முந்தையினு மோர்பொருளை நின்றீகின் றாரில் வந்துநிகழ் காருதவு றுங்காறங் காறு மண்டுதிரை யானிறைய வொண்காவின் றேறல் கந்தமலர் வேனிலுமி ழுஞ்சீர்பொன் றாத கம்பரொரு மாவினுமை யுந்தாமுஞ் சார நந்துநக ராளுமிறை செங்கோசெங் கீரை நங்கள்சிவ ஞானமுனி செங்கோசெங் கீரை.
|
(7) |
| |
|
| |
6. அரிசனம்-மஞ்சள் ; சந்தனமுமாம். தயங்குற-விளங்க. அக்கமணிவடம்-சிவ கண்மணிமாலை. 7. ஒன்று ஆர்வம் கூர-பொருந்திய அன்பு மிகுதிப்பட. தேறல்-தேன். பொன்றாத-கெடாத.
|
|
|
|