முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
வஞ்சமல மாயைகரு மஞ்சார்வின் றோட
       மண்டுவிழி நீர்சொரிய நின்றேயன் பாகி
நெஞ்சுருகு வார்துணைவ செங்கோசெங் கீரை
       நின்றநிலை பேர்தலிலி செங்கோசெங் கீரை
விஞ்சுருவ மோடருவி ரண்டோடொன் பானும்
       வெம்புபரை யாதியும் கன்றாகும் போதம்
நஞ்சொருப மாவருளி செங்கோசெங் கீரை
       நங்கள்சிவ ஞானமுனி செங்கோசெங் கீரை.
(8)
பங்கயம் தேறிநற வுண்டேசங் கீத
       பண்கள்பல பாடியொழு குந்தாளொண் காவி
அங்குமுத மூசுபிண ரந்தாள்கொம் பூதி
       யம்பணில வாவியினும் வெஞ்சூல்கொண் டேகி
மங்குல்துயில் சோலையினு மங்கோடிங் கோடு
       வண்டுதிரி கீழ்நதியு ளின்கேளின் பூசை
நங்கைநகர் வாழிறைவ செங்கோசெங் கீரை
       நங்கள்சிவ ஞானமுனி செங்கோசெங் கீரை.
(9)
கம்பநகர் வாழிறைவ செங்கோசெங் கீரை
       கங்கைசும வாதபர செங்கோசெங் கீரை
செம்பொன்முடி தாழ்சரண செங்கோசெங் கீரை
       செங்கைமணி நேர்தலைவ செங்கோசெங் கீரை
இம்பர்வரு மாரமுத செங்கோசெங் கீரை
       யெங்கண்மல நாசவொளி செங்கோசெங் கீரை
நம்புமடி யார்துணைவ செங்கோசெங் கீரை
       நங்கள்சிவ ஞானமுனி செங்கோசெங் கீரை.
(10)

8. சார்வின்றோட-சார்தல் இல்லாமல் ஓட. நஞ்சொருபம்-நமது வடிவம். 9.பங்கயம்-தாமரை. மங்குல்-துகில். 10. கங்கை சுமவாத-கங்கையைத் தாங்காத. இம்பர்-இவ்வுலகம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்