முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
பாரி னிற்பெருஞ் செல்வமுண் பவர்க்கெனப்
       பற்றிநின் றுண்ணாமற்
பனைப ழுத்ததற் கொக்குமூர் நடுநயப்
       பண்பினோன் றிருவென்னுஞ்
சீர் யற்படு மொழியெமக் கல்லது
       திருவுடை யோர்தம்மிற்
சிலர்க்கு ரைப்பது முகமனென் றுணர்த்துறு
       செய்கையொன் றுடையோனே
கூரி சைப்படா விவறன்மா லையனிடைக்
       குறுகுறா தீவோர்கட்
குறுகு வாரிற்சண் பகம்விடுத் தொள்வழைக்
       கொத்தில்வேள் சிலைவாங்கும்
நாரி மொய்த்தெழு மயிலைமால் வரைக்கொரு
       நாயகா தாலேலோ
நகரி நாயகக் காஞ்சிமா நகர்ச்சிவ
       ஞானியே தாலேலோ.
(7)
கல்லெ னத்திர டோட்புனை மீர்ந்தொடைக்
       காமவே ளுலகெல்லாங்
கவன்று தன்வலிக் குடைந்துதம் புறந்தரக்
       கண்டதோர் மிகுவீரன்
வில்லி யற்சுவைக் கரும்பும்வெம் பகழிகள்
       வீயும்விற் குழைநாரி
விளரி யங்குரற் சுரும்புமாய் முடிந்துற
       விளைத்தவோர் விறலாளா
சொல்லி சைப்படு சங்கவண் புலவர்தந்
       தூக்கொடு நிறைநிற்பச்
சொக்கர் கூடலிற் பொற்பல கையினிடாத்
       தூக்கினும் படியொக்கும்
நல்லி சைத்தமிழ் மாலைசூ டியபுகழ்
       நல்லவா தாலேலோ
நகரி நாயகக் காஞ்சிமா நகர்ச்சிவ
       ஞானியே தாலேலோ.
(8)

7. பனைபழுத்ததற்கொக்கும் : “நடுவூருள் நச்சுமரம் பழுத்தற்று” என வருந்திருக்குறளுக்கு மறுதலையாக, நயப்பண்பினோன் திரு, பலரும் பயன்கொள ஊர்நடுவே பனை பழுத்தாற் போல்வதென நயம்பட உரைத்தவாறாம். சீரியற்படுமொழி-சிறப்புப் பொருந்திய அருளுரை. முகமன்-உபசாரம். இவறன்மாலையன்-உலோபத் தனமுடையவன் வேள்சிலை வாங்கும் நாரி-மன்மதன் கருப்பு வில்லிற்பூட்டிய நாணியாகிய வண்டுகள். 8. கவன்று-வருந்தி. புறம்-முதுகு. விறல்-வெற்றி. சங்கவண் புலவர்-பெருமை பொருந்திய சங்கப் புலவர்கள். தூக்கு-செய்யுள்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்