| 21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ் |
|
| வேறு |
| |
| |
ஒருமா யையினுயிர் மாபரம் வேறா மாபோலு முதுபோ மெனினிலை பேதமெனாவோ தாவீயா வருமா மறையுரை யாடலும் வேறா மான்மாவோ டருளார் பதியியல் பாயென வோதா மாறாவாய் வருமா கமமுரை யாடலு மாரா யாராயே மலைவா துசெய்மய லாலுள மோவா நோவாவார் செருமாய் வுறுமொரு வாசக தாலோ தாலேலோ சிவஞா னியெனுயிர் நாயக தாலோ தாலேலோ.
|
(9) |
| |
| |
நனவா வொருசிவ மோதிறை தாலோ தாலேலோ நவினா வலர்புகழ் மாலைய தாலோ தாலேலோ கனவா வுலகுறு தேசிக தாலோ தாலேலோ கதிர்வே லவன்மயி லாசல தாலோ தாலேலோ மனவா சகவினை மேவிலி தாலோ தாலேலோ மதனா டல்கொலடன் மாதவ தாலோ தாலேலோ சினவா வருளித யாலய தாலோ தாலேலோ சிவஞா னியெனுயிர் நாயக தாலோ தாலேலோ.
|
(10) |
| |
|
| |
9. உதுபோம் எனில்-இது நீங்குமென்றால். ஓதா வீயா-கூறியருள் செய்து. ஒவா-ஒழியாமல். 10. நவில்-கூறப்பெறுகிற மனவாசக வினை-மன வாக்குச் செயல்கள். மேவிலி-அடையாதவன்.
|
|
|
|