1. சோணசைலமாலை |
|
|
ஊழுறு மணிப்பொற் கோயில்போய் வாவ லுறக்கொடுத் தாங்குநிற் புணர்த்தாப் பாழுறு மனம்பே ரவாக்குடி யிருப்பப் பண்ணுமென் கண்ணுநண் ணுவையோ வீழுறு மெயினர் கிழங்ககழ் குழியும் வேழம்வீழ் குழிகளு நிரம்பத் தாழுறு மருவி பொன்சொரி சோண சைலனே கைலைநா யகனே.
|
(66) |
|
|
பைம்மறிப் படுப்பி னுள்ளறி யாமற் பணிநறுந் துகில்புனை மடவார் மெய்ம்மிசைக் கருந்தோல் கண்டுவந் துழலும் வினையினே னுய்யுநா ளுளதோ செம்மலர்ப் பதம்பா தலங்கடந் திடவான் றிருமுடி கடப்பினு மூவர் தம்மியற் செப்பி னடங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(67) |
|
|
|
66. ஊழ்-வரிசை. வீழல்-விரும்பல். வாவல்-வௌவால் எயினர்-வேடர். 67. பை மறிப்படுப்பின்-பையைத் திருப்பிப் பார்ப்பதுபோல் என்க. “பைம்மறியாப் பார்க்கப்படும்.” என்றார் பிறரும். பைம்மறிப்படுத்தி யென்னும் பாடத்திற்கு, பைம்மறி போலாக்கியெனக் கொள்க. கருந்தோல்-(அகத்துள்ள அசுத்தந்தோன்றாவாறு மேற்பொதிந்த) பெருந்தோல். இயல்-இயற்றமிழையும் நிறத்தையும்; செப்பு-சொல்லையும் சிமிழையும் உணர்த்தி நின்றது.
|
|
|
|