1. சோணசைலமாலை |
|
|
செக்குறு திலத்தின் வருந்துபு பிறக்குஞ் செல்லலு நாடியின் பிணிப்பு நெக்குற வறிவு கலங்குசாக் காடு; நினைதொறு முளம்பதைக் கின்றேன் மொய்க்குறு முகில்கண் டரிகரி யென்னு முழக்கமு மரகர வென்னுந் தக்கவர் முழக்கு மெதிரெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(68) |
|
|
மரணமும் பிறவித் துயருநீங் குறநூல் வாய்ச்சிலம் பிக்கருள் புரிந்த கருணியென் றுனைவந் தடைந்தன னினிநின் கருத்தினை யின்னதென் றறியேன் முரணிபம் பரூஉக்கை தலைமிசை யெடுப்ப முழைக்கரும் பாம்பென மணித்தேர்த் தரணியுள் வெருவி யகன்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(69) |
|
|
அங்கையின் வைத்த கூர்ங்கனன் மழுவா லருவினைக் காடற வெறிந்து மங்கலில் பத்தி வித்திட வடியேன் மனத்தினைத் திருத்துநா ளுளதோ பொங்குறு செக்கர் கருவிசும் புறவேள் புரத்தெரி கதுவிட நோக்கித் தங்குத லொப்ப நின்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(70) |
|
|
|
68. அரி-சிங்கம். கரியென்னு முழக்கம்-கரியெனக் கொண்டு ஆரவாரிக்கும் முழக்கம். இது அரிகரியென்னு முழக்கமும் அரகரவென்னுமுழக்கமும் இகலி யெழுமென முரண்படநிற்பதும் ஓர்க. திலம்-எள். செல்லல்-துன்பம். 69. சிலம்பிக்கருளியது சீகாளத்தியிலும் திருவானைக் காவிலும். கருணி-கருணையுடையவன். முரண்-வலிமை. தரணி-சூரியன். இபம்-யானை. 70. கரு விசும்புற நின்றிடுமென இயையும். கருவிசும்பு மன்மதனக்கும், செக்கர் அவனுடலிற்பற்றிய தீக்கும் ஒப்பு. மங்கல்-குறைதல்.
|
|
|
|