முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
சுருக்குமைம் புலனும் விரிக்குமூ தறிவுந்
      துன்னுநல் லினமுநீத் தகன்றே
இருக்கும்வெங் கயவ ரினமுமென் றருளி
      யென்னைநின் னடிமைசெய் தருள்வாய்
முருக்குமங் கதமா மணியுமிழ்ந் தகன்ற
      முழைதழற் றெனவுளம் வெருவித்
தருக்கமொண் புலிசென் றுறமருள் சோண
      சைலனே கைலைநா யகனே.
(71)
அந்தரி குமரி யஞ்சலி கௌரி
      யம்பிகை மனோன்மணி மதங்கி
சுந்தரி யுமையுண் ணாமுலை யெனநின்
      துணைவியை வாழ்த்துமா றருளாய்
வந்தரி சுருதி மருங்கினிற் பாட
      வயங்குதும் புருவுநா ரதனுந்
தந்திரி யிசையாழ் பாடுறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே
(72)
நீக்குறு மயலு நிலைத்தபே ரறிவு
      நின்றிரு வடிமலர்க் கன்ப
காக்குறு மனமு முடையமெய்த் தொண்டர்
      கணத்தினு ளெனைவிடுத் தருளாய்
தேக்குறு மிறாலிற் கன்னல்காட் டுவபோற்
      றென்றல்வந் தசைதொறு மெல்லத்
தாக்குறு காந்த டுடுப்பலர் சோண
      சைலனே கைலைநா யகனே.
(73)

71. ஐம்புலச் சுருக்கமும் மூதறிவு விரிவும் நல்லினந்துன்னலும் கயவரினம் நீத்தகன்றிருத்தலும் அருளி அடிமை கொள்க வென்பது. தழற்று-தழலை யுடையது. முருக்கும்-கொல்லும். அங்கதம்-பாம்பு. தருக்கும்-தருக்கையுடைய. 72. திருவருட் சத்தியானே தேவரீரையடைய வேண்டுதலின் அச்சத்தி வழிபாடும்அருள்கவென்பது. அரி-வண்டு. 73. காட்டுவபோல் தாக்குறு காந்தளென்க. நாழிகையை அறிந்து கோடற்கு அக்காலத்து வழங்கிய இயந்திரத்தைச் சுட்டி வர்ணித்தபடி; அன்றி, இக்காலத்து வழங்குவதேயெனின், தேன் கூடு கடிகாரக் கருவிக்கும், அதில் மெல்லத் தாக்குங் காந்தள் மொட்டு மெல்லப்புடை பெயரும் நிலைமுள்ளுக்கும், அம்மொட்டில் முறுக்குடைந்து விரியுந்தனியிதழ் விரைந்துலவு முள்ளுக்கும், தாக்குதலோசை ஒலிக்கும் உவமித்ததென்க. இறால்-தேனடை. கண்ணல்-நாழிகை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்