1. சோணசைலமாலை |
|
|
பவமிலே மினியா மென்றிறு மாந்து பயமற வியந்திடப் பத்தி நவமிலே மடியே மென்செய்வா னிருந்து நாளினை வறிதொழிக் கின்றேம் அவமிலே மிமையா விழியினாற் காண்கை யால்வலங் கொளவடி நிலந்தோய் தவமிலே மெனவான் சுரர்தொழுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(74) |
|
|
கண்கணிற் பரிந்த கண்டுவப் பனவே கைகணிற் றொழுபவே செவிகள் பண்களிற் புகழும் புகழ்ச்சிகேட் பனவே பதநினை வலம்புரி வனவே எண்குபுற் றிடப்ப வெழுமணி கரவா விருந்துசென் றிருள்கவர் வனபோல் தண்கதிர்க் கற்றை கான்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(75) |
|
|
நிணந்திகழ் வடிவேற் காளையே யென்று நேரிழை யவர்விழைந் திடுவோர் குணந்திரி தளிரின் மடியவே கண்டுங் கொடியனேன் வாழ்வுவந் திருந்தேன் மணந்திமிர் மகளிர் சிலம்பொடு மைந்தர் வார்கழ றுவக்கிட வலம்போய்த் தணந்திடு மமயத் தறிந்துநாண் சோண சைலனே கைலைநா யகனே.
|
(76) |
|
|
|
74. பத்திநவம்-பத்தியாகிய புதுமை. கடவுளை இமையா விழியாற் காணலும் கால் நிலந்தோய வலம் வருதலுமே தவமும் அவை பெறாமையே அவமுமாதல் குறிப்பித்தவாறு. 75. இருட்செறிவுபோலும் கரடியினிறந் தோன்றாதபடி மணி கதிர்பரப்புமென்க. கான்றிடும்-வெளிப்படுத்தும். 76. குணம்-தன்மை. இவ்வாழ்வெனச் சுட்டுவருவிக்க. சிலம்புங் கழலுந் துவக்குண்டது முன்னரறியாமை சனநெருக்கத்தாலென்க. கழல்-அரவின் படம் போலமைந்து கொக்கி போன்றிருத்தலின் துவக்குங் கருவியாயிற்று, தணந்திடும் அமயம்-வலம்புரிதலில் இருந்து பிரிகிறசமயம்.
|
|
|
|