| 21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ் |
|
| |
உருக்கிளரும் வடிவென்று நிலையாத விடயத்தி லுழலும் புலன்களென்று மொழிகின்ற புத்தியது தானென்றும் விரிவாகி யொன்றாய குணமதென்றும் பரக்குமிவை யன்றன்று புருடனே யென்றுமுயர் பகுதியே யென்றுமதன்மேற் பரவிந்து வென்றுமவை யன்றியே மனமொழி படாதவொரு பிரமமென்றும் விரிக்கிலிது நிறைவென்று மணுவென்று மொன்றென்றும் வேறுபற் பலவென்றுமெய் விளைவென்று மிலதென்று முயிரியல்பு பலசமயர் வேறுவே றாகவைத்துத் தருக்கமிடு கலகமற வந்தகரு ணாகரா சப்பாணி கொட்டியருளே தனையறியு மறிவையறி வென்றசிவ ஞானியே சப்பாணி கொட்டியருளே.
|
(3) |
| |
| |
மும்மைமல முங்கதிர்க் கற்றைவட் டப்பரிதி முன்னிருள்செய் தீரமதியின் முழுநில வெறிக்கும்வெண் டிருநீறு ஞானமெனு மொய்குழலை மன்றல்புரிவார் எம்மணிய தென்றுபுனை நன்முகக் கண்டியுட னிறைவனரு ளஞ்செழுத்து மிலிங்காங்க சங்கசம ரசநிலைமை யிதுவென்ன விருளறவுணர்த்து குருவும் மெய்ம்மையுணர் வொடுகலந் துற்றிருந் தங்கையில் வெளிப்பட்ட ஞானவடிவும் விளங்குசர மும்புனித தீர்த்தசிவ சேடமும் மேலுலக வித்தென்றவை தம்மையுல கினில்விளக் கியவந்த தேசிகா சப்பாணி கொட்டியருளே, தனையறியு மறிவையறி வென்றசிவ ஞானியே சப்பாணி கொட்டியருளே.
|
(4) |
| |
|
| |
3. உருக்கிளரும்-வடிவம் விளங்கும். பரக்கும்-பரவும். மனமொழிபடாத-மனம் வாக்குக் காயங்கட்கு எட்டாத. 4. ஈரமதி-குளிர்ந்த திங்கள். மொய் குழலை-பெண்ணை. மன்றல் புரிவார்-மணம் புரிவார். கண்டி-சிவகண்மணிமாலை.
|
|
|
|